×

ஓசூர் வாக்காளர்களுக்கு திமுக எம்எல்ஏ நன்றி

ஒசூர், ஜூன் 18: ஓசூர் திமுக எம்எல்ஏ சத்யா வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். தொகுதிக்குட்பட்ட திம்மசந்திரம், முத்தாளி, புனுகன்தொட்டி, கெலவரப்பள்ளி உள்ளிட்ட கிராமங்களில் சுற்றுப்பயணம் செய்து வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது, வீடுகள்தோறும் சென்று பொதுமக்களிடையே குறைகளை கேட்டறிந்தார். இதில், ஒன்றிய செயலாளர்கள் சின்னபில்லப்பா, நாகேஷ், மாணவரணி ராஜா, நகர இளைஞரணி சுமன், வர்த்தக அணி துணை அமைப்பாளர் வெங்கடேஷ், நகர துணை செயலாளர் திம்மராஜ், ரவி, ரெட் சுரேஷ், ரத்தன்சிங், அரி, பிரகாஷ், நவின், சரவணன், கார்த்திக், ராஜா, நாகராஜ் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.


Tags : DMK MLA ,Hosur Voters ,
× RELATED அண்ணா பல்கலை. பதிவாளராக டாக்டர்...