×

கொளகத்தூர் கூட்டுறவு சங்க தலைவராக திமுக பிரமுகர் தேர்வு

தர்மபுரி, ஜூன் 18: கொளகத்தூர் கூட்டுறவு சங்க தேர்தலில், கடும் போட்டிக்கு இடையே திமுகவை சேர்ந்த முருகன் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.தர்மபுரி ஒன்றியம் கே.நடுஅள்ளி ஊராட்சி கொளகத்தூர் கிராமத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இதில் 3400 பேர் உறுப்பினர்களாக உள்ளனர். ஆண்டுக்கு சுமார் ₹5 கோடிக்கு வர்த்தகம் நடக்கும் இச்சங்கத்திற்கான தேர்தல் நடந்தது. தேர்தலில் 11 இயக்குனர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இந்த 11 இயக்குனர்கள் மூலம், சங்க தலைவராக திமுகவை சேர்ந்த முருகன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். துணைத்தலைவராக மாதையன் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முருகன் நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். முன்னாள் தலைவர் கவுதமன், ஊராட்சி செயலாளர் விஜயகுமார், சர்வேயர் கோவிந்தன், காளி, செந்தில் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

இதுகுறித்து புதிய தலைவர் முருகன் கூறுகையில், ‘கொளகத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தேர்தலில், அதிமுகவை சேர்ந்தவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிப்பு பட்டியல் ஒட்டினர். இதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. ஜனநாயக முறைப்படி தேர்தல் வைத்து தலைவர் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று நீதிமன்றம் கூறியதன்படி தேர்தல் நடத்தப்பட்டு, நான் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டேன்,’ என்றார்.

Tags : DMK ,candidate ,Cochin Cooperative Societies ,
× RELATED மோடியிடமிருந்து இந்தியாவை...