ஐம்பெரும் விழா

தர்மபுரி, ஜூன் 18: தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குனர் சங்கம் சார்பில், ஐம்பெரும் விழா நேற்று நடந்தது.விழாவிற்கு சங்க பொறுப்பாளர் ரவிசந்தர் தலைமை வகித்தார். உடற்கல்வி இயக்குனர் முத்துராஜன் வரவேற்றார். நிகழ்ச்சியில் உயர்கல்வி அமைச்சர் கே.பி.அன்பழகன் கலந்து கொண்டு, சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுகளை வழங்கி பாராட்டினார். நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ராமசாமி, சங்க பொறுப்பாளர் சங்கர பெருமாள், ரத்தினகுமார், செல்வகுமார், சதீஷ், தேவிசெல்வம், பெரியதுரை, சீனிவாசன், சண்முகவேல், சுப்ரமணி, ஆனந்தன், முத்துக்குமார், ராஜேந்திரன், முருகேசன், கோவிந்தராஜ், பூக்கடை ரவி, வேடியப்பன், ரவிசந்திரன், தங்கராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.Tags : ceremony ,
× RELATED கொடியேற்று விழா