தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆர்ப்பாட்டம்

அரூர், ஜூன் 18: அரூரில் தீண்டாமை ஒழிப்பு முன்னணியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.திருநெல்வேலியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின், முன்னணி ஊழியர் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், அரூர் ரவுண்டானா அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. வட்ட செயலாளர் மாது தலைமை வகித்தார். இதில், திருநெல்வேலியில் படுகொலை செய்யப்பட்ட அசோக் குடும்பத்தினருக்கு, முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ₹50 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். கொலை வழக்கில் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி 60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய ேவண்டும். இறந்த அசோக் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க ேவண்டும் என வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன.Tags : demonstration ,
× RELATED போராட்டத்தில் ஈடுபட்ட 450 பேர் மீது வழக்கு பதிவு