×

‘ஹெல்மெட்’ அணிந்தால் உயிரிழப்பை தடுக்க முடியும்

தர்மபுரி, ஜூன் 18: இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மெட் அணிவதன் மூலம், விபத்துகளின் போது உயிரிழப்பைத் தடுக்க முடியும் என்று, தர்மபுரி எஸ்பி ராஜன் தெரிவித்தார்.தர்மபுரி மாவட்ட காவல் துறை சார்பில், ஹெல்மெட் அணிய வேண்டியதன் அவசியம் குறித்த விழிப்புணர்வு கூட்டம், வள்ளலார் திடலில் நடந்தது. இதில் எஸ்பி ராஜன் பேசியதாவது:தர்மபுரி மாவட்டத்தில் கடந்தாண்டு நடந்த சாலை விபத்துகளில், 50 சதவீத உயிரிழப்புகள் வாகன ஓட்டிகள், ஹெல்மெட் அணியாததால் ஏற்பட்டுள்ளது. பெரும்பாலான இடங்களில், விபத்துகளில் ஏற்படும் உயிரிழப்புகள் தலையில் அடிபடுவதால் மட்டுமே அதிகம் நடக்கின்றன. தலையில் காயமடைவோரில் 99 சதவீதம் பேர் உயிரிழக்க நேரிடுகிறது.

மீதமுள்ள ஒரு சதவீதத்தினரும், கோமா நிலைக்கு சென்று விடுகின்றனர். எனவே, விலைமதிப்பற்ற உயிரை பாதுகாக்க, இருசக்கர வாகனம் ஓட்டும் போது, ஹெல்மெட் அணிய வேண்டும். தற்போது நீதிமன்றமும், வாகனத்தை பறிமுதல் செய்வது உள்ளிட்ட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளது. தேவையற்ற நடவடிக்கைகளைத் தவிர்க்கவே, தர்மபுரி மாவட்டத்தில் காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு எஸ்பி ராஜன் தெரிவித்தார். கூட்டத்தில், தர்மபுரி டிஎஸ்பி ராஜ்குமார் மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.


Tags : death ,
× RELATED மாஸ்கோவில் நடைபெற்ற இசை...