×

அரூர் பகுதியில் தாழ்வாக பறந்த சிறிய ரக விமானத்தால் பரபரப்பு

அரூர், ஜூன் 18: அரூர் சுற்று வட்டார பகுதியில், தாழ்வாக பறந்த சிறிய ரக விமானத்தால் பரபரப்பு ஏற்பட்டது.அரூர் நகர், ராயப்பன்கொட்டாய், எல்லப்புடையாம்பட்டி, ஈட்டியம்பட்டி, பாளையம், தீர்த்தமலை உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் சிறிய ரக விமானம் ஒன்று, நேற்று காலை 7.15 மணி முதல் 9 மணி வரை 5க்கும் மேற்பட்ட முறை வானில் வட்டமிட்டு பறந்து சென்றது. மிகவும் தாழ்வான நிலையில் இந்த விமானம் பறந்ததால், பொதுமக்கள் இடையே பரபரப்பும், அச்சமும் ஏற்பட்டது. இதே போல், கடந்த வாரம் மொரப்பூர், மருதிப்பட்டி சுற்று வட்டார பகுதியில், 10க்கும் மேற்பட்ட தடவை விமானம் பறந்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

சென்னை முதல் சேலம் வரையிலான 8வழிச்சாலை திட்டம் குறித்து, ஏதேனும் ஆய்வு செய்யப்பட்டதா, அல்லது ஓசூர், புதுச்சேரி, சேலம் வழித்தடங்களில் புதிய விமானங்கள் இயக்குவது குறித்து ஆய்வு செய்தனரா என்று மக்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது. மேலும், பெங்களூரு, ஓசூரில் இருந்து பயிற்சி விமானங்கள் வந்து சென்றிருக்காலம் என்று, போலீஸ்  வட்டாரங்களில் கூறப்படுகிறது.

Tags : area ,Arur ,
× RELATED விஷ செடிகளுக்கு தமிழக மண்ணில் இடம்...