விவசாய தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம்

முஷ்ணம், ஜூன் 18: முஷ்ணத்தில் விவசாய தொழிலாளர் சங்க ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் பட்டுசாமி தலைமை தாங்கினார், செயலாளர் காசிலிங்கம், பொருளாளர் செல்வராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் துரை கலந்துகொண்டு பேசினார். வரும் 25 ,26ஆம் தேதியில் முஷ்ணம், காட்டுமன்னார்கோவில், புவனகிரி ஆகிய ஊர்களில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துவது, தேசிய ஊரக வேலையை 200 நாட்களாக உயர்த்திடவும், கள்ளிப்பாடி- காவனூர் இடையே பாலம் அமைக்க விரைந்து நடவடிக்கை மேற்கொள்ளவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதில் நிர்வாக குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

× RELATED உரிய பேருந்துகள் இல்லாததை கண்டித்து...