×

பக்கிங்காம் கால்வாயை சீரழிக்கும் இறால் பண்ணையை அகற்ற வேண்டும்

சிதம்பரம், ஜூன் 18: சிதம்பரம் கிள்ளை அருகே பக்கிங்காம் கால்வாயை சீரழிக்கும் இறால் பண்ணைகளை அகற்றக்கோரி கிராம மக்கள் திரண்டு வந்து சிதம்பரம் சப்-கலெக்டர் விசுமகாஜனிடம் முறையிட்டனர். சிதம்பரம் சப்-கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று காலை வந்த திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் கிள்ளை ரவீந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் ரமேஷ்பாபு ஆகியோர் தலைமையில் பொன்னந்திட்டு, சிங்காரகுப்பம், கிள்ளை மற்றும் பக்கிங்காம் பாசன விவசாயிகள் சப்-கலெக்டர் விசுமகாஜனிடம் மனு அளித்தனர். மனுவில் அவர்கள் கூறியுள்ளதாவது. கிள்ளை அருகே உள்ள பக்கிங்காம் வாய்க்காலில் இருந்து இறால் குட்டைக்கு தண்ணீர் எடுப்பதால் வாய்க்கால் வற்றிவிட்டது. மேலும் இறால் பிடித்த பிறகு அந்த கழிவுநீரை மோட்டார் மூலம் பக்கிங்காம் வாய்காலில் விட்டு மிச்சம் இருந்த நல்ல தண்ணீரையும் பாழாக்கிவிட்டனர். ஆகையால் அங்கு இறால் பண்ணை நடத்துபவர்களின் உரிமத்தை ரத்து செய்து விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என மனுவில் கூறியுள்ளனர். அப்போது  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட குழு உறுப்பினர் கற்பனைசெல்வம், சிதம்பரம் நகர செயலாளர் ராஜா, முத்து உள்ளிட்ட பலர் உடன் வந்திருந்தனர்.

Tags : shrimp farm ,Buckingham Canal ,
× RELATED வேளச்சேரி ஏரியில் இருந்து உபரி நீர்...