×

சுருக்கு வலையை இழந்த மீனவர்களுக்கு இழப்பீடு

புதுச்சேரி, ஜூன் 18:  புதுச்சேரி மாநில அதிமுக சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்எல்ஏ வெளியிட்டுள்ள அறிக்கை:  மீன் உற்பத்தி வளத்தை மீன் குஞ்சு பருவத்திலேயே முழுமையாக அழிக்கும் சுருக்கு வலை, மடிப்பு வலை, இரட்டை மடிப்பு வலைகளை மீனவர்கள் பயன்படுத்தக் கூடாது என மத்திய அரசு மூன்று வருடங்களுக்கு முன் சட்டம் இயற்றி தடை உத்தரவு பிறப்பித்தது. அதன்படி, தமிழகம், கேரளா, ஆந்திரா, ஒடிசா, குஜராத், மகாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் தடை சட்டத்தை பின்பற்றி வருகின்றன. ஆனால் புதுச்சேரி அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இந்நிலையில் மடிப்பு வலைகளை பயன்படுத்தி தமிழக பகுதியில் மீன் பிடிக்கும், புதுச்சேரி மீனவர்களுக்கு தமிழக மீனவர்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். கடலூர் மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மூன்று தினங்களுக்கு முன், புதுச்சேரி சுருக்கு வலை மற்றும் மடிப்பு வலைகளை தமிழக பகுதியில் கைப்பற்றியுள்ளனர். புதுச்சேரி அரசு மவுனம் காக்காமல், சுருக்குவலை. மடிப்பு வலை, இரட்டை மடிப்பு வலைகளுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். புதுவை அரசின் அலட்சிய போக்கினால் வலைகளை இழந்த மீனவர்களுக்கு உரிய இழப்பீட்டு தொகையை வழங்க வேண்டும். அந்த மீனவர்கள் வேறு வலைகளை பயன்படுத்தி தொடர்ந்து மீன்பிடி தொழில் செய்ய உரிய நிவாரண உதவி வழங்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Tags : fishermen ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...