மீனவ முதியோருக்கு ஓய்வூதியம்

புதுச்சேரி, ஜூன் 18:  புதுச்சேரி அரசு மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை மூலம் மீனவர் முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்கான திட்டத்தின் கீழ் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் 1,411 புதிய பயனாளிகள் கண்டறியப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மார்ச் மாதத்துக்கான ஓய்வூதியத்தை வயதிற்கேற்ப (50 முதல் 59 வரை ரூ.1,570, 60 முதல் 79 வரை ரூ.2,070, 80 வயதுக்கு மேல் ரூ.3,135) புதுச்சேரியை சேர்ந்த 738 பயனாளிகளுக்கு 12 லட்சத்து 7 ஆயிரத்து 225 ரூபாய் வழங்கும் நிகழ்ச்சி சட்டசபையில் வளாகத்தில் நடந்தது. இதில் மீன்வளத்துறை அமைச்சர் மல்லாடி கிருஷ்ணா ராவ் கலந்துகொண்டு, மீனவ முதியோருக்கு ஓய்வூதியத்தினை அவரவர் வங்கி கணக்கில் நேரிடையாக வரவு வைக்கப்படும் குறிப்பாணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் கந்தசாமி, எம்எல்ஏக்கள் ஜெயமூர்த்தி, அன்பழகன், மீன்வளத்துறை இயக்குநர் முனிசாமி, இணை இயக்குநர் தெய்வசிகாமணி, துணை இயக்குநர் (நலப்பிரிவு) இளைய பெருமாள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Tags : fishermen ,
× RELATED காலமுறை ஊதியம், ஓய்வூதியம் கேட்டு சாலை...