×

யோகா, கரலாக்கட்டை போட்டி

புதுச்சேரி, ஜூன் 18:   மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி, மக்களின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை கருத்தில் கொண்டு மத்திய அரசால் கொண்டாடப்படும் சர்வதேச யோகா தினத்ைத ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டும் மாணவர்களுக்கு உடல் மற்றும் மனநலனை பாதுகாப்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் புதுவை பூரணாங்குப்பத்தில் உள்ள ஜோதி சிலம்பம் சத்திரிய குருகுலம் மற்றும் மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜியின் என்எஸ்எஸ் ஆகியவை இணைந்து மாநில அளவிலான யோகா மற்றும் புதுவை மண்ணில் முதல்முறையாக தேகப்பயிற்சி வீரர்களை உருவாக்கும் பாரம்பரிய மரபுக்கலையான கரலாக்கட்டை போட்டி வரும் 21ம் தேதி மணக்குள விநாயகர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி கல்லூரி வளாகத்தில் நடக்க உள்ளது.இப்போட்டியில் யோகா பிரிவில் சப் ஜூனியர் (8-11 வயது) (திரிகோணாசனம், சக்ராசனம், தனுராசனம், சர்வாங்காசனம், பாதாசனம்), ஜூனியர் (11-14 வயது) (கருடாசனம், ஏகபாதசக்ராசனம், பச்சிமோத்தாசனம், பகாசனம், மச்சியாசனம்), சீனியர் (14-17 வயது) பத்மசவாங்கசனம், வீரபத்ராசனம், சக்ரபாதசனம், விபதபச்சிமோத்தாசனம், பூமசப்தவஜிராசனம்) ஆகிய பிரிவுகளில் ஆண், பெண் இருபாலரும் கலந்துகொள்ளலாம். அதேபோல கரலாக்கட்டை பிரிவில் மினி சப்ஜூனியர் (6-10 வயது), சப் ஜூனியர் (11-14 வயது), ஜூனியர் (15-17 வயது) ஆகிய பிரிவுகளில் ஆண்கள், பெண்கள் இருபாலரும் கலந்துகொண்டு ஒத்தக்கை சுற்று, தோல் சுற்று, தலை சுற்று, உடல் சுற்று, உள் சுற்று ஆகிய 5 சுற்றையும் செய்து ண்பிக்கலாம். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்களுடன் பரிசுகளும், பங்குபெறுகிறவர்களுக்கு சான்றிதழ்களும்
வழங்கப்பட உள்ளது.

Tags :
× RELATED கொரோனா பாதுகாப்பு விழிப்புணர்வு கூட்டம்