பாஜக பொறுப்பாளர்கள் நியமனம்

புதுச்சேரி, ஜூன் 18:  பாஜக அகில இந்திய தலைவர் அமித்ஷா ஒவ்வொரு மாநிலத்திலும் கட்சியை மேலும் பலப்படுத்த அந்தந்த மாநில தலைமைக்கு உத்தரவிட்டுள்ளார். இதுபோல் புதுவையில் பாஜகவை வலுப்படுத்தும் நடவடிக்கையில் கட்சி தலைமை ஈடுபட்டுள்ளது. அதன்படி புதுவையில் உறுப்பினர்களை சேர்க்க கட்சியின் துணைத் தலைவரான ஏம்பலம் செல்வம் மாநில உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளராகவும், நாகராஜ் இணை பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் மாவட்ட ரீதியாக உறுப்பினர் சேர்க்கை பொறுப்பாளர்களை மாநில தலைவர் சாமிநாதன் ஒப்புதலோடு ஏம்பலம் செல்வம் நியமித்து அறிவித்துள்ளார். அதன்படி வில்லியனூர் மாவட்டத்துக்கு பொறுப்பாளராக சாய் சரவணகுமார், இணை பொறுப்பாளராக ஆனந்தன், உழவர்கரைக்கு பொறுப்பாளராக ரத்தினவேல், இணை பொறுப்பாளராக அகிலன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இதுதவிர வில்லியனூர் மாவட்டத்துக்கு டி.சிவக்குமார், புதுச்சேரி நகர மாவட்டத்துக்கு இணை பொறுப்பாளராக கோபி என்ற சிவராஜ், அரியாங்குப்பம மாவட்டத்துக்கு பொறுப்பாளராக விஸ்வமோகன், இணை பொறுப்பாளராக தட்சிணாமூர்த்தி, காரைக்கால் மாவட்டத்துக்கு பொறுப்பாளராக துரை.சேனாதிபதி, இணை பொறுப்பாளராக சிவசுப்பிரமணியன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.இவர்கள் அனைவரும் மாவட்ட மற்றும் தொகுதி நிர்வாகிகளுடன் இணைந்து தங்களது மாவட்டத்தில் புதிய உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க பணியாற்ற வேண்டுமென ஏம்பலம் செல்வம் தெரிவித்துள்ளார்.

Tags : BJP ,nominees ,
× RELATED பாஜகவை தோற்கடிக்க மாநில கட்சிகளுக்கு...