கரூரில் நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர் சங்க பொதுக்குழு கூட்டம்

கரூர், ஜூன் 18: தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பராமரிப்பு ஊழியர்கள் சங்க கரூர் மாவட்ட பிரிவின் சார்பில் மாவட்ட பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. வெங்கமேட்டில் நடைபெற்ற இந்த கூட்டத்துக்கு மாவட்டத்தலைவர் ஞானசேகரன் தலைமை வகித்தார். துணைத்தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். மாநில பொருளாளர் கோபாலகிருஷ்ணன், மாநில பொதுச் செயலாளர் விஜயகுமார் உட்பட அனைத்து மாவட்ட, மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டு பேசினர்.
கரூர் கோட்டத்தில் உள்ள இரவு காவலர் பணியிடத்துக்கு 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு முதுநிலை பட்டியல் வெளியிட்டு அதனடிப்படையில் இரவு காவலர் பணியிடம் வழங்க வேண்டும்.கரூர் கோட்டத்தில் இருவழி (எல்டிசி) பயணச் சலுகை விண்ணப்பித்தவர்களுக்கு ஒராண்டுகளாக வழங்கப்படாமல் இருந்து வருகிறது. இதனை உடனடியாக பரிந்துரை செய்து வழங்க வேண்டும்.கூட்டுறவு சங்கத்தில் கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உரிய காலத்தில் கையொப்பம் இட்டு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகள் குறித்து இதில் விவாதிக்கப்பட்டன.கரூர் கோட்டத்தில் உள்ள இரவு காவலர் பணியிடத்துக்கு 5ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு முதுநிலை பட்டியல் வெளியிட்டு அதனடிப்படையில் இரவு காவலர் பணியிடம் வழங்கவேண்டும்.

Tags : Karur ,Highway Road Maintenance Employees Union General Committee Meeting ,
× RELATED கரூர் அருகே தனியார் பஸ்சின் முன்பக்க டயர் கழன்று ஓடியதால் பரபரப்பு