நெல்லையில் வாலிபர் சங்க நிர்வாகி படுகொலை கண்டித்து தோகைமலையில் மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ஆர்ப்பாட்டம்

தோகைமலை, ஜூன் 18: நெல்லையில் வாலிபர் சங்க நிர்வாகி படுகொலையை கண்டித்து தோகைமலையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் நெல்லையில் வாலிபர் சங்க நிர்வாகி அசோக் என்பவரை படுகொலை செய்ததை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. தோகைமலை பேருந்து நிலையம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றிய செயலாளர் சக்திவேல் தலைமை வகித்தார். ஒன்றிய குழு உறுப்பினர்கள் முனியப்பன், சங்கப்பிள்ளை, பாப்பாத்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் இலக்குவன் கலந்து கொண்டு வாலிபர் சங்க நிர்வாகி படுகொலையை கண்டித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் ஒன்றியக்குழு நிர்வாகிகள் ரமேஷ், தங்கராசு, பாலகிருஷ்ணன், வடிவேல், செல்வராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.கரூர்: கரூர் தபால் தந்தி அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு நகரக்குழு உறுப்பினர் தண்டபாணி தலைமை வகித்தார்.மூத்த தலைவர் ரத்தினவேலு, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜீவானந்தம், கரூர் நகர செயலாளர் ஜோதிபாசு, சிஐடியூ மாவட்ட செயலாளர் முருகேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். இதில் மாவட்டக் குழு உறுப்பினர்கள்,  கட்சி நிர்வாகிகள் மற்றும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நெல்லை மாவட்ட பொருளாளர் அசோக் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Tags : Marxist Communist Party of India Party Demonstration ,
× RELATED போலீசார் இல்லாத நேரத்தில்...