வெள்ளியணை அருகே கோயில் விழாவில் தகராறு வாலிபருக்கு கத்திக்குத்து

கரூர், ஜூன் 18: கரூர் மாவட்டம் வெள்ளியணை அருகே கோயில் விழாவின் போது ஏற்பட்ட தகராறில் மாணவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.கரூர் தாந்தோணிமலை வஉசி நகரை சேர்ந்தவர் அருண்குமார்(17). பிளஸ் 2 படித்து முடித்து உள்ள இவர் கரூர் மாவட்டம் ஜெகதாபியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் இரவு அந்த பகுதியில் உள்ள ஒரு கோயில் விழாவினை முன்னிட்டு மஞ்சள் நீராட்டு விழா நடைபெற்றது. இதில் நண்பர்களுடன் கலந்து கொண்ட அருண்குமார் ஒருவர் மீது ஒருவர் முட்டையை வீசி விளையாடியதாக கூறப்படுகிறது.ஏன் முட்டை வீசி விளையாடுகிறீர்கள் என இதே பகுதியை சேர்ந்த செந்தில்குமார் உட்பட நான்கு பேர் அருண்குமாரிடம் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகவும் தெரிகிறது.வாக்குவாதம் முற்றிய நிலையில் திடீரென ஏற்பட்ட தகராறில், அருண்குமாருக்கு வயிற்றில் கத்தி குத்து விழுந்தது. இதில் காயமடைந்த அருண்குமார் ந்தோணிமலையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறார். இவரின் புகாரின் பேரில் வெள்ளியணை போலீசார் செந்தில்குமார் உட்பட நான்கு பேர் மீதும் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.நடந்து சென்றவர் பைக் மோதி பலி: சேலம் மாவட்டம் மேட்டூரைச் சேர்ந்தவர் பழனி(51). இவர் கடந்த 15ம் தேதி அன்று மாலை கரூர் ஈரோடு சாலை புன்னம்சத்திரம் அருகே நடந்து சென்றார்.அப்போது எதிரே வந்த பைக் பழனி மீது மோதியது. இதில் படுகாயமடைந்தவர் ஆபத்தான நிலையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் பைக்கில் சென்ற பாலசுப்ரமணி என்பவரும் காயமடைந்து கரூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.இந்த விபத்து சம்பவம் குறித்து வேலாயுதம்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

× RELATED காவிரி நதிநீர் பிரச்னை விவகாரம் இரு...