×

வாங்கப்பாளையம் மகளிர் தொழிற் கூட்டுறவு சங்கத்தில் உற்பத்தி மாணவ, மாணவிகளுக்கு புதிய சீருடைகள் வழங்கல்

கரூர், ஜூன் 18: கரூர் வாங்கப்பாளையத்தில் உள்ள தையல் மற்றும் சார்புத்தொழில்கள் மகளிர் மேம்பாட்டு தொழிற்கூட்டுறவு சங்கம் சார்பில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகளுக்கு புதிய சீருடைகள் உற்பத்தி செய்து வழங்கப்பட்டுள்ளது.
கரூர் நகராட்சிக்குட்பட்ட வெங்கமேடு வாங்கப்பாளையத்தில் சமூக நலத்துறை சார்பில் தையல் மற்றும் சார்புத்தொழில்கள் மகளிர் மேம்பாட்டு தொழிற்கூட்டுறவு சங்கம் அமைக்கப்பட்டு பயன்பாட்டில் இருந்து வருகிறது. இந்த சங்கத்தில் வெங்கமேடு, இனாம்கரூர், வாங்கப்பாளையம் உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து 900 பெண்கள் உறுப்பினர்களாக உள்ளனர். அரசு பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இந்த சங்க உறுப்பினர்கள் மூலம் தைக்கப்படும் சீருடைகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த சங்கத்தில் இந்தாண்டு 8 ஒன்றியங்கள், 2 மாவட்ட கல்வி அலுவலகங்கள் ஆகிய பகுதிகளில் உள்ள 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 33,254 மாணவர்கள், 33, 890 மாணவிகளுக்கு இந்தாண்டு அரசு அறிமுகம் செய்த டார்க் க்ரீன், சான்ட்டல் கலர் ஆகிய வண்ணங்களில் புதிய சீருடைகள் தைக்கும் பணி கடந்த சில வாரங்களாக நடைபெற்றது.இந்நிலையில் இந்த சங்க உறுப்பினர்கள் மூலம் தைக்கப்பட்ட புதிய சீருடைகள் அனைத்தும் தற்போது வரை கிருஷ்ணராயபுரம், க.பரமத்தி, அரவக்குறிச்சி ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக சீருடைகள் தைக்கப்பட்டு விரைவில் வழங்கப்படவுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Tags : Women's Labor Cooperative Societies ,
× RELATED சனப்பிரட்டி குகை வழி ரயில்வே பாதையில் தண்ணீர் கசிவு