×

வெள்ளியணை தெற்கு நடுமேட்டுப்பட்டியில் பாரபட்சமாக தண்ணீர் திறந்து விடும் டேங்க் ஆபரேட்டரை மாற்ற வேண்டும்

கரூர், ஜூன் 18: வெள்ளியணை தெற்கு நடுமேட்டுப்பட்டியில் பாரபட்சமாக தண்ணீர் திறந்து விடும் டேங்க் ஆபரேட்டரை மாற்ற வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் கிராம மக்கள் மனு கொடுத்தனர்.கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் வெள்ளியணை தெற்கு நடுமேட்டுப்பட்டி ஊர் பொதுமக்கள் அளித்த கோரிக்கை மனு:எங்கள் கிராமத்தில் சுமார் 100 குடும்பத்தினர் வாழ்ந்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு தனியாக மேல்நிலை தொட்டி இல்லை. மிக கடுமையாக தண்ணீர் தட்டுப்பாடு உள்ளது. டேங்க் ஆபரேட்டர் இல்லாததால் சம்பந்தம் இல்லாத ஒருவர் வந்து பாரபட்சத்துடன் தண்ணீர் திறந்து விடுகிறார். அவரை மாற்றி விட்டு புதிய ஆபரேட்டர் நியமிக்க வேண்டும். சின்டெக்ஸ் டேங்க் அமைத்து கொடுத்து குடிநீர் பிரச்னையை தீர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.கிருஷ்ணராயபுரம் தாலுகா ரெங்கநாதபுரம் ஊராட்சி கட்டளை, மலையப்பபுரம், ரெங்கநாதபுரம், மேலமாயனூர் பகுதி மக்கள் அளித்த மனு:ரெங்கநாதபுரம் ஊராட்சியில் சுமார் 4486 மக்கள் வசித்து வருகின்றனர். இதில் கட்டளை, மலையப்பபுரம், ரெங்கநாதபுரம், நத்தமேடு, மேலக்கட்டளை போன்ற ஊர்கள் உள்ளன. திருச்சி மெயின்ரோட்டில் இருந்து கட்டளை செல்ல சுமார் இரண்டரை கிமீ வடக்கே போக வேண்டும். இரவு 7 மணிக்கு மேல் வேலைக்கு சென்று விட்டு வரும் மக்கள், கொடிய விஷப்பூச்சிகள், பாம்பு போன்றவை தார்ச்சாலையில் ஊர்ந்து செல்வதால் அச்சப்படுகின்றனர். மெயின் ரோட்டில் இருந்து ஊருக்குள் வரும் தார்ச் சாலையில் மின்விளக்கு வசதியை ஏற்படுத்த வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

Tags : silver operator ,middle ,
× RELATED உதயமார்த்தாண்டபுரம் அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு பேரணி