×

குளித்தலையில் ரயிலில் அடிபட்டு ஆண் மயில் பலி

குளித்தலை, ஜூன் 18: கரூர் மாவட்டம் குளித்தலை ரயில் நிலைய தண்டவாளத்தில் நேற்று காலை ஆண் மயில் ஒன்று அடிபட்ட நிலையில் இறந்து கிடந்து உள்ளது. இது குறித்து அவ்வழியாக நடைபயிற்சி மேற்கொண்டவர்கள் ரயில் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த ரயில் நிலைய அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று இறந்து கிடந்த ஆண் மயிலை மீட்டு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறை அதிகாரிகள் குளித்தலை ரயில் நிலையம் வந்து இறந்து கிடந்த ஆண் மயிலை மீட்டு பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்தனர்.

Tags :
× RELATED சிறுமிக்கு எஸ்பி பரிசு