×

கொல்கத்தா சம்பவத்தை கண்டித்து கரூர் மாவட்டத்தில் மருத்துவர்கள் கறுப்பு பேட்ஜ் அணிந்து பணி

கரூர், ஜூன் 18: கொல்கத்தாவில் மருத்துவர்கள் தாக்கப்பட்டதை கண்டித்து கரூர் மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு மருத்துவமனை டாக்டர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர். கொல்கத்தாவில் மருத்துவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக நேற்று தமிழகம் முழுதும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை டாக்டர்கள் போராட்டங்களை நடத்தினர். கரூர் மாவட்டம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனை டாக்டர்கள், 120 பெண் மருத்துவர்கள் உட்பட 220 மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியாற்றினர்.இதே போல் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 200க்கும் மேற்பட்டோர் நேற்றுமுன்தினம் காலை முதல் நேற்று காலை வரை புறநோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்காமல் போராடினர். எமர்ஜென்சி கேஸ்களுக்கு மட்டும் தனியார் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

Tags : Doctors ,district ,Karur ,incident ,Kolkata ,
× RELATED பாரபட்ச அபராதத்தை ரத்துசெய்யக்கோரி...