விவசாயிகள் அறிவிப்பு கும்பகோணம் அன்னை கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடக்க விழா

கும்பகோணம், ஜூன் 18: கும்பகோணம் அடுத்த கோவிலாச்சேரி அன்னை கல்வி குழுமம் சார்பில் முதலாமாண்டு மாணவர்களுக்கான வகுப்பு தொடக்க நாள் விழா நடந்தது. கல்விக்குழும தலைவர் அன்வர்கபீர் தலைமை வகித்தார். செயலாளர் ஹுமாயூன்கபீர் முன்னிலை வகித்தார். குறும்பட இயக்குனர் துரைமுருகன், இயக்குனர்கள் ராஜ்குமார், ரவி, நஜிமுதீன் ஆகியோர் பேசினர். தமிழ்துறை தலைவர் லயோலாபீரிஸ் வரவேற்றார்.அன்னை இன்ஜினியரிங் கல்லூரி முதல்வர் மகாதேவன், பல்தொழில்நுட்ப கல்லூரி முதல்வர் சபாநாயகம், அன்னை கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மாணிக்கவாசுகி, கல்வியியல் கல்லூரி முதல்வர் சண்முகநாதன், அன்னை பாத்திமா கல்வியியல் கல்லூரி முதல்வர் முத்துசாமி, ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் ஜெயக்குமாரி, பாராமெடிக்கல் கல்லூரி முதல்வர் சுமதி, இயற்கை மருத்துவம் மற்றும் யோகா அறிவியல் கல்லூரி முதல்வர் ஜோதிநாயர், தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் ஆண்டனிராஜ் ஆகியோர் வாழ்த்தி பேசினர். பேராசிரியர் விடிவெள்ளி நன்றி கூறினார்.

Tags : opening ceremony ,Kumbakonam College ,
× RELATED தொழிற்சங்க அலுவலகம் திறப்பு விழா