×

தலைவிரித்தாடும் குடிநீர் பஞ்சம் தஞ்சை கலெக்டர் அலுவலக வளாகத்தில் இந்து மக்கள் கட்சி நிர்வாகி தீக்குளிக்க முயற்சி

தஞ்சை, ஜூன் 18: தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கலெக்டர் அண்ணாதுரை தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் மனு அளிக்க பொதுமக்களுடன் இந்து மக்கள் கட்சி மாநில இளைஞரணி செயலாளர் கார்த்திக் போன்ஸ்லே வந்தார். அப்போது கலெக்டர் அலுவலக வளாகத்தில் திடீரென வாட்டர் பாட்டிலில் கொண்டு வந்த மண்ணெண்ணெயை தனது தலையில் ஊற்றி கொண்டு தீக்குளிக்க முயன்றார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த வல்லம் இன்ஸ்பெக்டர் நடராஜன் உள்ளிட்ட போலீசார் விரைந்து சென்று கார்த்திக் போன்ஸ்லேவிடமிருந்து மண்ணெண்ணெய் பாட்டிலை பிடுங்கினர்.அப்போது கார்த்திக்ராவ் போன்ஸ்லே மற்றும் பொதுமக்கள் கூறும்போது, தஞ்சை கீழவாசல் வண்ணான்துறை பகுதியில் 100க்கும் மேற்பட்ட சலவை தொழில் செய்யும் மக்கள் பூர்வீகமாக வசித்து வருகின்றனர். 40 ஆண்டுகளுக்கு மேல் வசித்து வரும் இவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்த சில சமூக விரோதிகள் முயற்சி செய்கின்றனர். அந்த இடத்திலிருந்து இவர்களை விரட்டி விட்டு இடத்தை ரியல் எஸ்டேட் மூலம் கூறுபோட்டு விற்பனை செய்ய ஒரு கும்பல் முயற்சி செய்து வருகிறது.இதனால் அங்கு வசிக்கும் மக்கள் உடனே இடத்தை காலி செய்ய வேண்டுமென சமூக விரோதிகளால் மிரட்டல் வருகிறது. எனவே மக்கள் அதே இடத்தில் நிரந்தரமாக பாதுகாப்புடன் வாழ மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர். இதையடுத்து கலெக்டரை சந்தித்து மனு அளிக்க பொதுமக்களை போலீசார் அழைத்து சென்றனர்.

Tags : Hindu People's Party ,Tanjore Collector ,
× RELATED சிஏஏவால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பு...