×

குறைதீர் கூட்டத்தில் கிராம மக்கள் மனு கும்பகோணம் பகுதி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருள் பறிமுதல்

கும்பகோணம், ஜூன் 18: கும்பகோணம் பகுதி கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் கடைகளுக்கு ரூ.1.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.கும்பகோணம் ஆயிகுளம் சாலையில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் கேரிபைகள், கப்புகள், தட்டுகள்றி விற்பனை செய்யப்படுவதா நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து ஆயிகுளம் சாலையில் உள்ள பிரபல ஜவுளி கடை, ஹோட்டல் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகளில் நகராட்சி நகர்நல அலுவலர் பிரேமா தலைமையில் துப்புரவு ஆய்வாளர்கள் பாலசுப்பிரமணியன், மணிகண்டன், முருகானந்தம் ஆகியோர் சோதனையிட்டனர். அப்போது அஙகு அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் தட்டுகள், கப்புகள், பைகள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இந்த சோதனையில் 3 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்து ரூ.1.50 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டு எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டது. இதில் 1 டன் நானோ பைகள் ஆயிகுளம் சாலையிலுள்ள பிரபல ஜவுளி கடையில் பறிமுதல் செய்தது குறிப்பிடதக்கது.மேலும் கும்பகோணம் நகராட்சி பகுதிகளில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் வைத்திருந்தாலோ அல்லது விற்பனை, உற்பத்தி செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து அபராதம் விதிப்பதுடன் கடைக்கு சீல் வைத்து உரிமம் ரத்து செய்யப்படும். யாரேனும் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வது அல்லது விற்பனை செய்வது பொதுமக்களுக்கு தெரிந்தால் உடனடியாக நகர்நல பிரிவுக்கு தகவல் கொடுக்க வேண்டும். இவ்வாறு நகர்நல அலுவலர் பிரேமா தெரிவித்துள்ளார்.பாபநாசம்: பாபநாசம் அருகே அய்யம்பேட்டை பேரூராட்சி பகுதியில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள், புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என்று வட்டார சுகாதார மேற்பார்வையாளர் பாஸ்கரன், சுகாதார ஆய்வாளர் செல்லப்பா ஆகியோர் சோதனையிட்டனர். அப்போது சில கடைகளில் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவது கண்டித்து பறிமுதல் செய்ததுடன் கடை உரிமையாளர்களுக்கு ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் 80 கிலோ தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து கடை உரிமையாளர்களிடம் அபராதமாக ரூ.3,500 வசூலித்தனர்.

ரூ.1.50 லட்சம் அபராதம் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் அம்மையகரம் காவிரி டெல்டா விவசாயிகள் சங்கம் ரவிச்சந்தர் அளித்த மனுவில், பிரதமர் அறிவித்த பிரதமரின் விவசாயிகள் கவுரவ ஊக்கத்தொகை வழங்கும் திட்டம் துரிதமாக செயல்படவில்லை. தேர்தல் அறிவிப்பால் விண்ணப்பம் வாங்குவது நிறுத்தப்பட்டது. இதுவரை விண்ணப்பித்த விவசாயிகளுக்கு முதல் தவணைதொகை வழங்கவில்லை. தேர்தல் முடிந்துள்ள நிலையில் பல விவசாயிகளிடம் விண்ணப்பம் பெறவில்லை. பல கிராம நிர்வாக அலுவலர்களிடம் விண்ணப்ப படிவங்களே இல்லை. இந்நிலையில் வரும் 29ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள் என கூறப்படுகிறது. எனவே காலக்கெடுவை நீட்டித்து அனைத்து விவசாயிகளும் பயன்பெற செய்ய வேண்டும். மேலும் இத்திட்டத்தின் பயன்பெற ஒரு எக்டேர் அல்லது 2 எக்டேர் நிலம் இருக்க வேண்டுமா என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : area shops ,Kumbakonam ,government ,
× RELATED கும்பகோணம் ஆதிவராகப்பெருமாள் கோயிலில் பங்குனி உத்திர தெப்போற்சவம்