×

திரளான பக்தர்கள் தரிசனம் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூடவேண்டும்

திருத்துறைப்பூண்டி, ஜூன்18: திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டும் என நுகர்வோர் மையம் வலியுறுத்தி உள்ளது.திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் உள்ள டாஸ்மாக் கடையைமூடவேண்டும்.தமிழகஅரசின் விதிகளை மீறிபள்ளிகள் அருகில் 200 மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கும் மாணவிகள்மற்றும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லை. இதனை மாற்ற நுகர்வோர்மையம் சார்பில் திருத்துறைப்பூண்டி வர்த்தக சங்கத்தினரும் இணைந்து போராடி பின் வருவாய் துறை மற்றும் டாஸ்மாக் மேலாளர் உடனும் சமரசமாக பேசி அதில் இருதரப்பிலும் உடன்பாடு ஏற்பட்டது. அதன்படி மூன்று மாதகாலஅவகாசம் ஆன மே மாதம் 11ம் தேதிக்குள் கடையைஇடமாற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.ஆனால் இப்போதும் வருவாய் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் வியாபாரிகளும் பொதுமக்களும் கொதிப்பு அடைந்து உள்ளனர்.பின்னர் நடைபெற்ற நுகர்வோர் செயற்குழு கூட்டத்தில் வருவாய் துறை அதிகாரிகள்ஒப்பந்தம் மீறியதால் வர்த்தக சங்கத்தினருடன் இணைந்து டாஸ்மாக் கடைக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்துவோம் என முடிவு செய்யப்பட்டுள்ளது.ஆதலால் திருவாரூர் கலெக்டர் உடனடியாகஒப்பந்தப்படி திருத்துறைப்பூண்டி பேருந்து நிலையத்தில் அரசு ஆணைகளை மீறிஇயங்கி வரும் டாஸ்மாக் மதுக்கடைகளை மூடஉடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று திருவாரூர் மாவட்ட நுகர்வோர் மையதலைவர் வக்கீ ல் நாகராஜன் கோரிக்கை விடுத்துள்ளார்.

Tags : devotees ,shop ,Tasmag ,bus stand ,Tirupattukundi ,
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...