திருமக்கோட்டை அங்காள பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம்

மன்னார்குடி, ஜூன்18: மன்னார்குடி அடுத்த திருமக்கோட்டை அங்காள பரமேஸ்வரி கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.திருவாரூர் மாவட்டம் மன்னார்குடிக்கு அடுத்த திருமக்கோட்டை அங்காள பரமேஸ்வரி, விநாயகர், முருகன் ஆகிய கோயில்களுக்கு கும்பாபிஷேகம் நடத்த திருப்பணிக்குழு மற்றும் கிராமவாசிகளால் முடிவு செய்யப் பட்டு கடந்த 3 மாத காலமாக கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு முன் மண்டபங்கள் எழுப்பபப் பட்டு கட்டிட பணி நிறைவு செய்யப் பட்டது.அதனைத் தொடர்ந்து கும்பாபிசேகத்தை முன்னிட்டு கடந்த 3 தினங்கள் மகாமாரியம்மன் கோயிலில் யாக சாலை பூஜைகள் நடத்தப் பட்டது. யாக சா லையில் புனித நீர் அடங்கிய கடம் வைத்து ஹோமம் வளர்க்கப் பட்டது. இதில் 81 கலச பூஜை, கஜபூஜை உள்ளிட்ட பல்வேறு விதமான பூஜைகள் செய்து அதன் நிறைவாக பூர்ணாஹூதி நடைபெற்றது. இந்நிலையில் அந்தணர்கள் வேத மந்திரங்கள் முழங்க புனித நீர் கொண்ட கடங்களை ஊர்வலமாக கொண்டு வந்தனர். பின்னர் விமான கலசங்களில் புனிதநீர் ஊற்றி கும்பாபிசேகம் நடைபெற்று, தீபாராதனை செய்யப் பட்டது. பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப் பட்டது.பின்னர் அங்காள பரமேஸ்வரி, விநாயகர், முருகன் ஆகிய 3 கோயில்களில் அருள்பாலிக்கும் சுவாமிகளுக்கு புனித நீர் கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து கோயிலில் விசேச தீபாராதனை செய்யப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழாவில் பங்கேற்ற அனைவருக்கும் அன்னதானம் வழங்கப் பட்டது. இரவு வாணவேடிக்கை முழங்க சுவாமி வீதியுலா நடைபெற்றது.

× RELATED விழிப்புணர்வு முகாமில் வலியுறுத்தல்...