×

முத்துப்பேட்டை குடியிருப்பு பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம் அன்றும்

முத்துப்பேட்டை, ஜூன்18: முத்துப்பேட்டை குடியிருப்பு பகுதியில் குவிந்து கிடந்த குப்பைகள் தினகரன் செய்தி எதிரொலியால் அகற்றப்பட்டது.முத்துப்பேட்டை 2-வது வார்டு ரஹ்மத்நகரில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில் பேரூராட்சி சார்பில் செய்யப்படும் குடிநீர் வசதி, தெருவிளக்கு, தூய்மை பணிகள், கழிவுநீர், வடிகால் என அனைத்து அடிப்படை வசதிகள் மிகவும் பின்தங்கிய நிலையில்தான் உள்ளது என்று இப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதில் ரஹ்மத் நகரில் புதிதாக தார்சாலை போடும் பகுதியில் சாலையோரத்தில் குடியிருப்புகளுக்கு நடுவே மாதக்கணக்கில் மலைப்போல் குப்பைகள் குவிந்து கிடந்தது. இதனால் துர்நாற்றம் வீசுவதும் அப்பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்றுநோய்களை பரப்பி வந்தது.இதுகுறித்து அப்பகுதி மக்கள் பலமுறை புகார் தெரிவித்தும் தேங்கி கிடக்கும் குப்பைகளை பேரூராட்சி அகற்றுவதற்கான நடவடிக்கைகள் ஏதும் செய்யவில்லை. இது குறித்து நேற்று 17ம்தேதி தினகரன் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து நேற்று முத்துப்பேட்டை பேரூராட்சி சுகாதார அலுவலர் வீரமணி நேரில் பார்வையிட்டு துப்பரவு பணியாளர்கள் மூலம் குவிந்து கிடந்த குப்பைகளை அகற்றினார். இதனால் மகிழ்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் செய்தி வெளியிட்ட தினகரனுக்கு நன்றி தெரிவித்தனர்.

Tags : Removal ,neighborhood ,
× RELATED போக்சோ சட்டத்தில் கைதான அதிமுக நிர்வாகி நீக்கம்: ஓபிஎஸ், இபிஎஸ் அறிவிப்பு