×

ஜாம்புவானோடையில் தென்னை விவசாயிகளுக்கு சிறப்பு தொழில்நுட்ப பயிற்சி

முத்துப்பேட்டை, ஜூன்18:திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த ஜாம்புவானோடையில் திருவாரூர் மாவட்ட நபார்டு வங்கி, ஆர்டி பவுண்டேசன் சேவை நிறுவனம் இணைந்து கஜா புயலால் பாதிக்கப்பட்ட தென்னை விவசாயிகளுக்கு 2நாள் சிறப்பு தொழில்நுட்ப பயிற்சி நேற்று துவங்கியது. நபார்டு வங்கி மேலாளர் பேட்ரிக் ஜாஸ்பர் தலைமை வகித்தார். முன்னதாக திட்ட ஒருங்கிணைப்பாளர் அம்பிகா வரவேற்று பேசினார். பயிற்சி குறித்து சேவை நிறுவன இயக்குனர் விஜயக்குமார் பேசினார் தமிழக தென்னை விவசாயிகள் சங்க தலைவர் கிருஷ்ணமூர்த்தி, தோட்டக்கலை துறை உதவி பேராசிரியர் விஜய்செல்வராஜ், உள்ளிட்டோர் பேசினர்.தற்போதைய தென்னை தொழில்நுட்பம் , நீர்மேலாண்மை குறித்தும், இயற்கை உரம், பூச்சிக்கொல்லி மருந்துகள் தயாரிப்பது குறித்தும், தென்னை விவசாயத்தில் அதிக லாபம் தரும் ஊடு பயிர்பயிரிடும் முறை குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது. மேலும் பயிற்சியில் பங்கேற்றவர்களுக்கு தென்னங்கற்றுகள், காய்கறி விதைகள், இயற்கை உர மாதிரிகளும் வழங்கப்பட்டது. முடிவில் திட்ட ஒருங்கிணைப்பாளர் கவிதா நன்றி கூறினார். இந்த பயிற்சி இன்றும் நடைபெறுகிறது.

Tags : coconut farmers ,Jambun ,
× RELATED தமிழ்நாடு முழுக்க தென்னை விவசாயிகள்...