×

வலங்கைமானில் நடந்த ஜமாபந்தி முகாமில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

வலங்கைமான், ஜூன் 18: வலங்கைமான் தாலுகாவில் ஐந்து நாட்களாக நடைபெற்ற வருவாய் தீர்வாயக் கணக்கு முடிப்பு நிகழ்ச்சியில் முதியோர் உதவித்தொகை உள்ளிட்ட 294 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து வரப்பெற்றது.
திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் தாலுகாவில் உள்ள ஆதிச்சமங்கலம், அரித்துவாரமங்கலம், மாணிக்கமங்கலம் உள்ளிட்ட 71 வருவாய் கிரமங்களுக்கு 1428ம் ஆண்டு வருவாய் தீர்வாயக் கணக்கு முடிப்பு நிகழ்ச்சி கடந்த ஆறாம் தேதி துவங்கி வரும் 18ம் தேதி வரை மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பால்துரை தலைமையில் நடைபெற்று வருகின்றது.கடந்த ஐந்து நாட்களாக நடைபெற்ற முகாமில் பட்டா மாறுதல் வீட்டு மனைப்பட்டா கோருதல், முதியோர் உதவித் தொகை, குடும்ப அட்டை கோருதல் உள்ளிட்டவை தொடர்பாக 294 கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். முதியோர் உதவித்தொகை கோரி நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் வரப்பெற்றது. அதனையடுத்து நேற்று பட்டா மாறுதலுக்கான ஆணையை மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நேர்முக உதவியாளர் (நிலம்) பால்துரை பயனாளிக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் வட்டாட்சியர் மதியழகன் மற்றும் வருவாய்த்துறை அலுவலர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags : camp ,Walamayam ,
× RELATED பண்ருட்டியில் அடுத்த எஸ். ஏரி பாளையம். கிராமத்தில் தேர்தல் புறக்கணிப்பு