×

டாக்டர்கள் போராட்டத்திற்கு ஆதரவு திருவாரூரில் அரசு மருத்துவர்கள் ஒரு மணி நேரம் சிகிச்சை புறக்கணிப்பு

திருவாரூர்,ஜூன் 18: மேற்கு வங்க மாநிலத்தில் டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து திருவாரூரில் நேற்று அரசு மருத்துவர்கள் வெளி நோயாளிகள் சிகிச்சையினை ஒரு மணி நேரம் புறக்கணித்தனர்.மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் அரசு டாக்டர்கள் தாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து நேற்று நாடு முழுவதும் அரசு மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்படி திருவாரூரில் இருந்து வரும் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை மற்றும் மாவட்டம் முழுவதும் இயங்கிவரும் 10 அரசு மருத்துவமனைகள், 48 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றில் பணிபுரிந்து வரும் 350 மருத்துவர்களும் கருப்பு பேட்ஜ் அணிந்து பணியில் ஈடுபட்டனர். மேலும் காலை 9 மணி முதல் 10 மணி வரையில் வெளிநோயாளிகள் சிகிச்சையும் புறக்கணித்தனர். மேலும் சம்பவத்தை கண்டித்து அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன்பாக ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதே கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு சில தனியார் மருத்துவமனைகளும் நேற்று வெளி நோயாளிகள் சிகிச்சை பிரிவினை புறக்கணித்தது குறிப்பிடத்தக்கது.

Tags : Government doctors ,doctors ,fight ,Tiruvarur ,
× RELATED செவிலியர்களுக்கு தபால் வாக்கு: பொதுச் செயலாளர் ரவீந்திரநாத் கோரிக்கை