சுவாமி சங்கரதாஸ் அணி குற்றச்சாட்டு புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே சர்வதேச யோகா தின பயிற்சி

பொன்னமராவதி, ஜூன் 18: பொன்னமராவதி அருகே உள்ள ஆலவயலில் இளையோர் பாராளுமன்றம் மற்றும் சர்வதேச யோகா தின யோகா பயிற்சி நடைபெற்றது.பொன்னமராவதி அருகே ஆலவயல் யோகம் பள்ளியில் இந்திய அரசு இளையோர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகம் நேருயுவகேந்திரா ஆகியவை இணைந்து இளையோர் பாராளுமன்றம் மற்றும் சர்வதேச யோகா தின யோகா பயிற்சி நடந்தது.பத்மாசனம், உக்கட்டாசனம் வஜ்ராசனம் உட்பட 36 வகையான ஆசனங்கள் மற்றும் தியான பயிற்சிகள் செய்யப்பட்டது. இதற்கு நேரு யுவகேந்திரா புதுக்கோட்டை கணக்காளர் நமச்சிவாயம் தலைமை வகித்தார். பள்ளி முதல்வர் மாதவன், சமூக ஆர்வலர் சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆத்ம யோகா பயிற்சி மைய தலைவர் யோகா. பாண்டியன், நெட்வொர்க் தலைவர் ராஜ்குமார், பீம் டிரஸ்ட் தலைவர் ஆனந்த் ஆகியோர் கருத்தாளர்களாக பங்கேற்றனர். முன்னதாக பொன்னமராவதி விடிவௌ–்ளி அறக்கட்டளை இயக்குனர் மலர்விழி வரவேற்றார். முடிவில் தன்னர்வலர் ரங்கதுரை நன்றி கூறினார்.இதில் தன்னார்வலர் நாராயணன், பள்ளி ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்ட நேரு யுவகேந்திராவின் சார்பில் காடத்தான்பட்டி கிராமத்தில் வட்டார அளவிலான இளையோர் பாராளுமன்றம் மற்றும் யோகா பயிற்சி நடைபெற்றது.நிகழ்ச்சிக்கு செல்லக்கண்ணு தலைமை வகித்தார். நேரு யுவகேந்திரா கணக்காளர் நமச்சிவாயம் நிகழ்ச்சியின் நோக்கம் குறித்து எடுத்துரைத்தார். இந்நிகழ்ச்சியில் தூய்மை பாரதம், தன் சுத்தம் மக்களாட்சி தத்துவத்தின் சிறப்புக்கள் போன்றவை பற்றி கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களுக்கு யோக பயிற்சி வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.நீர் மேலாண்மையை நுணுக்கமான முறையில் கடைபிடிக்க மண் ஈரப்பதம் கண்ட றிதல் கருவியை கோயமுத்தூரில் உள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழக கரும்பு இனவிருத்தி நிலையம் 2016ம் ஆண்டு ஜனவரி 20ம் தேதி வெளியிட்டது.மண் ஈரப்பதம் கண்டறியும் கருவி அனைத்துவித வேளாண் பயிர் மற்றும் மாடித் தோட்ட பயிர்களுக்கு உகந்தது. அதுமட்டுமில்லாமல் அனைத்து மண் வகைகளுக்கும் ஏற்றது. இதை பயன்படுத்தி உடனடியாக மண் ஈரப்பதத்தை கண்டறியலாம். கருவி யின் விலை ரூ.1,500 ஆகும்.

Tags : International Yoga Day Training ,Poonamaravathi ,
× RELATED பொன்னமராவதி சிவன் கோயிலில் கும்பாபிஷேகம் நடத்த தொல்லியல் துறை ஆய்வு