பொன்னமராவதியில் குற்றசெயல்களை தடுக்க பேருந்து நிலையத்தில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி

பொன்னமராவதி, ஜூன் 18: பொன்னமராவதியில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் தடுக்கவும், குற்றவாளிகளை எளிதில் கண்டு பிடிக்கும் நோக்கில் சிசிடிவி கேமராக்கல் பொருத்தப்பட்டுள்ளது.பொன்னமராவதி பேருந்து நிலையத்திற்கு புதுக்கோட்டை, சிவகங்கை, திருச்சி மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தினசரி வந்து செல்கின்றனர். சனி மற்றும் செவ்வாய்கிழமைகளில் கூடும் சந்தைக்கு ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வந்து காய்கறி வாங்கி செல்கின்றனர். சாதாரணமாக சுற்று பகுதியில் இருக்கும் நூற்றுக்கணக்கான கிராம மக்கள் பொன்னமராவதிக்கு வந்து தான் அனைத்து வித சாமான்கள் வாங்கி செல்ல வேண்டும்.அதனைக்கருத்தில் கொண்டு பொன்னமராவதி காவல்துறையின் சார்பில் பொன்னமராவதி பேருந்து நிலையம், அண்ணாசாலை ஆகிய இடங்களில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் இப்பகுதியில் குற்றச்செயல்கள் நடைபெறாமல் இருக்கவும், குற்றவாளிகள் பிடிக்கவும் உதவும் நோக்கில் உதவும் என காவல்துறையினர் இந்த கேமராக்களை பொறுத்தியுள்ளனர்.

Tags : bus station ,
× RELATED கும்மிடிப்பூண்டி பஜார் பகுதியில் காட்சி பொருளான சிசிடிவி கேமராக்கள்