ஆர்ப்பாட்டம்

பெரம்பலூர், ஜூன் 18: இந்தி திணிப்பு, மாநில உரிமை, சமூக நீதிக்கு எதிராக செயல்படும் மத்திய, மாநில அரசைக் கண்டித்து பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள காந்தி சிலை எதிரே மாவட்ட பெரியார் திராவிடர் கழகத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.மாவட்டத் தலைவர் தங்கராசு தலைமை வகித்தார். பகுத்தறிவு கழக நிர்வாகிகள் சோபன்பாபு, சரவணன், அம்பேத்கர் மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆனந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழக மாவட்ட அமைப்பாளர் அண்ணாதுரை, நகர செயலர் துரைசாமி, ஒன்றிய செயலர் பிச்சைபிள்ளை, தொழிலாளர் அணி நிர்வாகி விஜயேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மாவட்ட செயலர் ஆதிசிவம் நன்றி கூறினார்.

Tags : Demonstration ,
× RELATED நாமக்கல்லில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்