கொளக்காநத்தம் அருகே அண்ணன், தம்பியை தாக்கியதாக 3 பேர் கைது

பாடாலூர், ஜூன் 18: ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் அருகே அண்ணன் தம்பி இருவரையும் தாக்கியதாக 3 பேரை போலீசார் கைது செய்தனர்.ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் அருகே உள்ள கூடலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் மருதமுத்து மகன் ராஜேந்திரன் (55) .இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த கந்தசாமி மகன் சுந்தரம் (50) என்பவருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் ராஜேந்திரன், அவரது தம்பி ராஜாராம் (52) இருவரும் அவர்களுக்கு சொந்தமான நிலத்தில் வேலை செய்து கொண்டிருந்தனர்.அப்போது சுந்தரம், அவரது தம்பி சேகர்(38) உறவினர் பூபதி (57)ஆகியோர் ராஜேந்திரன் நிலத்தில் நடந்து சென்றனர். அப்போது ராஜேந்திரன் என்னுடைய நிலத்தில் நடக்க கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த சுந்தரம், சேகர், பூபதி ஆகியோர் சேர்ந்து ராஜேந்திரன், அவரது தம்பி ராஜாராம் இருவரையும் தாக்கியுள்ளனர்.இதில் காயமடைந்த ராஜேந்திரன் அரியலூர் அரசு மருத்துவமனையிலும், ராஜாராம் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனையிலும் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் . இது குறித்து மருவத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரம், சேகர், பூபதி ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kollakannam ,
× RELATED மானூர் அருகே தம்பியை தாக்கிய அண்ணன் மீது வழக்கு