×

ஓராண்டாக சம்பளம் வழங்காத தனியார் சிமென்ட் ஆலை நிர்வாகம் நடவடிக்கை கோரி கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு

பெரம்பலூர், ஜூன் 18: பெரம்பலூர மாவட்டம் ஆலத்தூர் தாலுகா கீழமாத்தூரில் உள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் கடந்த ஓராண்டாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்காததால் உடனடியாக சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு பெரம்பலூர் கலெக்டரிடம் தொழிலாளர்கள் மனு அளித்தனர்.இதுகுறித்து அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது ஆலத்தூர் தாலுகா கீழமாத்தூர் கிராமத்தில் உள்ள தனியார் சிமெண்ட் தொழிற்சாலையில் நாங்கள் கடந்த 11 ஆண்டாக பணியாற்றி வருகிறோம். இந்நிலையில் கடந்த ஓராண்டாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லை. குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தருவதில்லை.மேலும், சம்பளம் வழங்குவது தொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் சம்பந்தப்பட்ட தொழிலாளர் நல அலுவலகத்தில் புகார் செய்துள்ளோம். இதுகுறித்து தொழிலாளர் நல துணை ஆணையர் தலைமையில் நிர்வாகத்திடம் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் இது வரை சம்பளம் மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தர எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை .இதுதொடர்பாக தொழிற்சங்கத்தின் சார்பாக தொழிற்சாலை அலுவலர்கள் கேட்டபோது, பொறுப்பான நிர்வாகிகளும் சம்பளம் மற்றும் குடிநீர் வழங்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அனைத்து தொழிலாளர்களுக்கும் குடும்பத்தின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், அனைத்து குடும்பங்களும் கடன் சுமையால் பாதிக்கப்பட்டுள்ளோம். எனவே, எங்களுக்கு சம்பளம் மற்றும் குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறோம் என தொழிலாளர்கள் கலெக்டர் சாந்தா விடம் மனு அளித்தனர்.

Tags : cement plant ,collector ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...