×

சிமென்ட் ஆலைக்கு கொடுத்த நிலத்திற்கு உரிய இழப்பீடு கேட்டு மக்கள் சாலை மறியல்

அரியலூர், ஜூன் 18: அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் கிராமத்தில் இயங்கி வரும் அரசு சிமென்ட் ஆலைக்கு புதுபாளையம், வாலாஜாநகரம், அமீனாபாத், கயர்லாபாத், கல்லங்குறிச்சி ஆகிய கிராமங்களிலிருந்து கடந்த 25ஆண்டுகளுக்கு முன்பு விவசாயிகளிடமிருந்து மிகவும் குறைந்த விலைக்கு விவசாய நிலங்களை அரசு கையகப்படுத்தியது. தற்போது வரை உரிய இழப்பீடு வழங்காததை கண்டித்து அஸ்தினாபுரம் எம்ஜிஆர் சிலை முன்பு அரசு ஆலைக்கு நிலம் கொடுத்தோர் சங்க ஒருங்கிணைப்பாளர் நெருஞ்சிகோரை கலைவாணன் தலைமையில் 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதித்தது, இதனையடுத்து தகவலறிந்த வருவாய்துறை தாசில்தார் கதிரவன், அரசு சிமென்ட் ஆலை அதிகாரிகள் சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினர், இதில்கலெக்டர்   லுவலகத்தில்அமைதிபேச்சுவார்த்தைமூலம்தீர்வுகாணப்படும்எனதெரிவித்தனர். இதனையடுத்து விவசாயிகளிடம் அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தைக்கு உடன்பாடு ஏற்பட்டு சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Tags : road ,land ,cement plant ,
× RELATED காஞ்சிபுரம் – வாலாஜாபாத் சாலையில்...