×

நாகர்கோவில் ஆலம்பாறையில் பொன்ஜெஸ்லி சிபிஎஸ்இ பள்ளி தொடக்க விழா

நாகர்கோவில் : நாகர்கோவில் பார்வதிபுரம் ஆலம்பாறையில் பொன் ஜெஸ்லி பப்ளிக் ஸ்கூல் (சிபிஎஸ்இ) தொடக்க விழா நேற்று நடந்தது. பொன் ஜெஸ்லி குழும தலைவர் பொன் ராபர்ட்சிங் தலைமை வகித்தார். பள்ளி கட்டிடத்தை குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஜெரோம்தாஸ் வறுவேல் திறந்து வைத்து ஆசி வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: பொன் ஜெஸ்லி கல்வி நிறுவனங்களில் பொன் ஜெஸ்லி பப்ளிக் ஸ்கூல் சிபிஎஸ்இ  புதிதாக ெதாடங்கப்பட்டுள்ளது. இதற்கு பொன்.ராபர்ட்சிங்கிற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த கல்வி நிறுவனம் மேலும் வளரவேண்டும் என்றார். மார்ட்டின் ஜெபம் செய்தார். சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட குமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் செந்திவேல்முருகன் குத்துவிளக்கேற்றினார். அவர் பேசியதாவது: பள்ளிக்கு மாணவர்களை அனுப்பும் பெற்றோர் கடமை முடிந்து விட்டது என்று நினைக்க கூடாது. ஆசிரியர்கள் மாணவர்களை ஓரளவு தான் கட்டுப்படுத்த முடியும். பெற்றோர் தான் மாணவர்களுக்கு முதல் ஆசிரியர். படிப்பு என்றால் என்ன, வாழ்க்கை என்றால் என்ன என்பதை மாணவர்களுக்கு பெற்றோர் புரிய வைக்க வேண்டும். அப்படியென்றால் தான் மாணவர்கள் உயர்ந்த இடத்துக்கு வருவார்கள்.

படிப்பு என்றால் தவம் போன்றது. தவத்தால் கிடைப்பது தான் சிறந்த வாழ்க்கை. நல்ல பள்ளி, நல்ல ஆசிரியர் இருந்தாலும் அங்கு மாணவன் இருப்பது 8 மணி நேரம் தான். மீதி 16 மணி நேரம் வீடுகளில் தான் இருப்பார்கள். பள்ளியில் இருந்து மாணவர்கள் வீட்டுக்கு வந்த உடனே டியூசனுக்கு அனுப்பாதீர்கள். ஏனென்றால், இது மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் இடைவெளியை அதிகப்படுத்தும். உங்கள் கூடவே வைத்து அவரது அனைத்து தேவைகளையும், விருப்பு, வெறுப்பையும் தெரிந்து கற்றுக்கொடுங்கள். நல்ல குழந்தைகளாக வளர்த்து, கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கும்போது தான் நாம் நினைக்கும் இலக்கை அந்த மாணவனால் சாதிக்க முடியும். பெற்றோரும், ஆசிரியர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டால்தான் நல்ல மாணவ, மாணவிகளை உலகுக்கு அளிக்க முடியும் என்றார்.

நிகழ்ச்சியில், பொன் ஜெஸ்லி பப்ளிக் பள்ளி முதல்வர் வாஸ் ரஞ்சனி வரவேற்றார். கல்வி மாவட்ட அதிகாரிகள் மோகனன், ராமசந்திரநாயர், எம்என்கே மருத்துவமனை டாக்டர் சலீம், வள்ளலார் பேரவை தலைவர் பத்மேந்திரா சுவாமிகள், பொன் ஜெஸ்லி இன்ஜினியரிங் கல்லூரி டீன் முனைவர் காளியப்பன், முதல்வர் முனைவர் தியாகராஜன், பொன் ஜெஸ்லி பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி முதல்வர் அல்போன்ஸ், கல்வியியல் கல்லூரி முதல்வர் ஜெயஷீலா உள்பட பலர் கலந்துகொண்டனர். பொன் ஜெஸ்லி பப்ளிக் பள்ளி துணை முதல்வர் வசந்திஜாண் நன்றி கூறினார்.

ஜூன் 20ல் விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்

நாகர்கோவில், ஜூன் 18:  குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம்.வடநேரே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: ஜூன் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் 20ம் தேதி வியாழக்கிழமை காலை 11 மணிக்கு மாவட்ட ஆட்சியரக நாஞ்சில் கூட்ட அரங்கில் வைத்து நடைபெறுகிறது. மாவட்ட கலெக்டர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து இதற்கு முன்னர் நடைபெற்ற கோரிக்கை தினத்தில் பெறப்பட்ட விவசாயம் தொடர்பான மனுக்களுக்கான பதில்கள் வழங்கப்படும். மேலும், விவசாயிகளின் விவசாயம் தொடர்பான கோரிக்கைகளும் மாவட்ட கலெக்டரால் நேரில் பெறப்படும். கோரிக்கை மனுக்கள் பதிவு செய்து ஒப்புகை பெறும் வசதி மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் செய்யப்பட்டுள்ளது.

Tags : CBSE ,Phoenix ,school opening ceremony ,Nagercoil Alampara ,
× RELATED வரும் கல்வியாண்டில் 3 முதல் 6ம்...