×

நித்தம் அரங்கேறும் திகில் சம்பவங்கள் ஹெல்மெட் சோதனையில் இருந்து தப்பிக்க அதிவேகமாக பைக் ஓட்டும் இளைஞர்கள்

நாகர்கோவில், ஜூன் 18: குமரி மாவட்டத்தில் ஹெல்மெட் சோதனையில் இருந்து தப்ப போலீசாரை பார்த்த பின்னரும், இளைஞர்கள் சிலர் அதிவேகமாக பைக்கை ஓட்டி செல்வதால் விபரீதம் நிகழும் அபாயம் ஏற்பட்டுள்ளது. விபத்துக்களை குறைக்கும் வகையில் குமரி மாவட்டத்தில் ஹெல்மெட் சோதனை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் போலீசார் சோதனை நடத்தி வருகிறார்கள். நேற்றும் மாவட்டம் முழுவதும் வாகன சோதனை நடத்தி ஹெல்மெட் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நாகர்கோவிலில் அண்ணா பஸ் நிலையம், செட்டிக்குளம், மீனாட்சிபுரம், வடசேரி, ராமன்புதூர், பார் வதிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வாகன சோதனை நடைபெற்றது. பைக்குகளில் ஹெல்மெட் இல்லாமல் வந்தவர்களை மடக்கி போலீசார் வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்தனர். ஆயுதப்படை போலீசாரும் இணைந்து சோதனையில் ஈடுபட்டனர்.

போலீசார் நிற்பதை பார்த்ததும் பலர் தங்களது பைக்குகளை வேகமாக திருப்பி தப்பினர். ஒரு சிலர் போலீசாரை பார்த்ததும் அவசர அவசரமாக ஹெல்மெட் அணிந்தனர். இன்னும் சிலர் போலீசார் சோதனை நடத்துவதை பார்த்த பின்னரும் அவர்களிடம் சிக்காமல் பைக்குகளை வளைந்து, நெளிந்து வேகமாக தப்பிக்க முயற்சித்தனர். இந்த சம்பவங்களால் நகர பகுதிகளில் பரபரப்பு நிலவியது. போலீசார் கூறுகையில், நீதிமன்ற உத்தரவுப்படி பைக் ஓட்டுபவர்கள் ஹெல்மெட் அணிய வேண்டும்.  போலீசார் சோதனை நடத்துவதை பார்த்த பின்னரும் சிலர் அதி வேகமாக பைக்கை ஓட்டி தப்பிக்க முயற்சிக்கிறார்கள். அவர்களை போலீசார் பிடிக்க நினைத்து விபத்து நடந்தால், சம்பந்தப்பட்ட போலீசார் தான் சஸ்பெண்ட் ஆகி நடுத்தெருவில் நிற்க வேண்டும். எனவே பைக் ஓட்டும் போது ஹெல்மெட் அணிந்து ஓட்ட வேண்டும். உரிய ஆவணங்களையும் வைத்திருக்க வேண்டும் என போலீசார் கூறினர். குமரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களில் போக்குவரத்து விதிமுறை மீறியது தொடர்பாக  8,645 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  காரில் சீட் பெல்ட் அணியாமை, குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஓவர் லோடு, ஓவர் ஸ்பீடு உள்ளிட்ட பிரிவுகளிலும் போலீசார் வழக்குப்பதிவு ெசய்துள்ளனர்.

Tags : events ,youngsters ,
× RELATED நாடாளுமன்ற தேர்தலில் 100% வாக்குப்பதிவை...