×

சிறை கட்டிட பராமரிப்பு பணி காரணமாக காரைக்காலிலிருந்து 16 கைதிகள் புதுச்சேரி சிறைக்கு மாற்றம்

காரைக்கால், ஜூன் 18: காரைக்கால் கிளைச்சிறை கட்டிட பராமரிப்பு பணி காரணமாக, காரைக்கால் கிளைச் சிறையில் இருந்த 16 தண்டனைக் கைதிகள் நேற்று பாதுகாப்பாக புதுச்சேரி மத்திய சிறைக்கு மாற்றப்பட்டனர்.காரைக்கால் மாவட்ட கிளை சிறையில் 16 தண்டனைக் கைதிகள், 25 விசாரணை கைதிகள் என மொத்தம் 50 கைதிகள் உள்ளனர். இந்த சிறைச்சாலை பிரஞ்சு காலத்தில் கட்டப்பட்டதால், பெரும்பாலுமான கட்டிடங்கள் வலுவிழுந்து காணப்படுகிறது. இதனால், கட்டிட பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால், கைதிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, கொலை, கொள்ளை உள்ளிட்ட முக்கிய குற்றங்களில் ஈடுபட்டு சிறையில் அடைக்கப்பட்ட சுமார் 16 கைதிகளை, காரைக்காலில் இருந்து சுமார் 140 கிலோ மீட்டர் தூரமுள்ள புதுச்சேரி காலாபேட் மத்திய சிறைக்கு, மேல் அதிகாரிகளின் உத்தரவின் பேரில் மாற்ற கடந்த மாதம் முடிவு செய்யப்பட்டது.இதனை அறிந்த 16 தண்டனைக் கைதிகளும் கடந்த மே மாதம் 6ம் தேதி காலை திடீர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. சிறை அதிகாரியின் வேண்டுகோளை அடுத்து, மாவட்ட கலெக்டர் விக்ராந்த்ராஜா மற்றும் போலீசார், காரைக்கால் கிளைச்சிறைக்கு சென்று, கைதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையின் போது, புதுச்சேரி கிளைச் சிறை விதிப்படி 3 மாதத்திற்கும் அதிகமான தண்டனைப் பெற்ற கைதிகளை கிளைச் சிறையில் இல்லாமல், மத்திய சிறைச் சாலையில் வைக்க வேண்டும். மேலும் இங்கு வசதிகளை மேம்படுத்தும் பணி மற்றும் கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளும் போது கைதிகளுக்கு சிரமமாக இருக்கும் என்பதால் 3 மாதத்திற்கும் அதிகமான தண்டனைப் பெற்ற கைதிகளை புதுச்சேரிக்கு மாற்றுவதற்கு சிறைச் சாலை விதிப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. என எடுத்து கூறியதையடுத்து கைதிகள் உண்ணாவிரதத்தை கைவிட்டன்ர்.இந்நிலையில், நேற்று காலை காரைக்கால் கிளைச்சிறையிலிருந்து 16 தண்டனைக் கைதிகளையும், மிகுந்த பாதுகாப்போடு, புதுச்சேரி மத்திய சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

Tags : prisoners ,jail ,Karaikal ,Puducherry ,
× RELATED கொரோனா வைரஸ் எதிரொலியாக மூடப்பட்டது...