×

புதுச்சேரி பொறியியல் கல்லூரியில்

காரைக்கால், ஜூன் 18: காரைக்கால் திமுக அமைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான நாஜிம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:புதுச்சேரியில் உள்ள புதுச்சேரி பொறியியல் கல்லூரியில்(பெக்) காரைக்கால் பிராந்தியத்தை சேர்ந்த 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் பல்வேறு பிரிவுகளில் படித்து வருகிறார்கள். கல்வி கட்டணம், தங்கும் விடுதிக்கான கட்டணம், உணவுக்கான செலவுகள் என ஆண்டுக்கு ரூ.55 ஆயிரம் வரை மாணவர்கள் செலுத்துகிறார்கள். இது மட்டுமின்றி, கல்லூரி நிர்வாகம் ஸ்தாபன செலவு (எஸ்டாபிளிஷ்மென்ட் சார்ஜ்) என கூறி ஒவ்வொரு மாணவர்களிடம் ரூ.21 ஆயிரத்தை கூடுதலாக வசூலிப்பதாக கூறப்படுகிறது. இந்த தொகை வசூலிப்பது குறித்து விசாரணை செய்தபோது, மாணவர்களிடம் வசூலிக்கும் இந்த தொகையானது கல்லூரி ஊழியர்களின் ஊதியத்துக்கு பயன்படுத்தப்படுவதாக தெரிய வருகிறது. ஊழியர்களுக்கான ஊதியத்துக்கான நிதியை அரசிடமிருந்துதான் பெற வேண்டும். காரைக்காலில் இருந்து சென்று தங்கி படிக்கும் மாணவர்களிடம் இந்த தொகையை வசூலிப்பது ஏற்புடையது அல்ல.எனவே, இந்த விஷயத்தில், புதுச்சேரி உயர்கல்வித்துறை அமைச்சர் தலையிட்டு காரைக்கால் மாணவர்களிடம் ரூ.21 ஆயிரம் வசூலிக்கும் முறையை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என்றார்.

Tags : Puducherry Engineering College ,
× RELATED பாலாலய நிகழ்ச்சியுடன் துவக்கம்...