×

மருத்துவர்கள் போராட்டம் எதிரொலி மயிலாடுதுறையில் தனியார் மருத்துவமனைகள் மூடல் இன்று காலை வரை போராட்டம்

மயிலாடுதுறை, ஜூன் 18: கொல்கத்தாவில் பயிற்சி டாக்டர்கள் தாக்கப்பட்டதற்கு போராட்டம் நடத்துபவர்களை மேற்கு வங்க அரசு மிரட்டியதால் நாடுமுழுவதும் போராட்டம் நடைபெற்றுவருகிறது. 2006ல் தமிழகத்தில் மருத்துவர்களுக்கு பாதுகாப்பாக ஏற்படுத்தப்பட்ட போக்சோ சட்டத்தைபோல் மத்தியிலும் இயற்றவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நாகை மாவட்டம் மயிலாடுதுறை, தரங்கம்பாடி, குத்தாலம், சீர்காழி தாலுக்காக்களில் உள்ள 25க்கும்மேற்பட்ட தனியார் மருத்துவமனைகள் நேற்று காலை முதல் இன்று காலை 6 மணிவரை மூடப்பட்டது. இதுகுறித்து மயிலாடுதுறை இந்திய மருத்துவ சங்க தலைவர் பாரதிதாசன் கூறுகையில்,‘தேசிய அளவில் இந்த போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது, ஏற்கனவே தமிழகத்தில் மருத்துவர்கள் பாதுகாப்புக்கான சட்டம் இயற்றப்பட்டுள்ளது, அதே போன்றுநாடுமுழுவதும் இயற்றவேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்தப்போராட்டம் நடைபெற்றுவருகிறது, பொதுவாக வைத்தியம் பார்ப்பது நிறுத்தப்பட்டுள்ளது, அவசர சிகிச்சை மட்டும் பார்க்கப்பட்டுவருகிறது மற்ற எந்த வேலைகளும் நடைபெறவில்லை இந்திய மருத்துவ சங்கத்தின் மயிலாடுதுறை கிளை முழு ஒத்துழைப்பை அளித்துள்ளது என்றார்.

Tags : doctors ,Mayiladuthurai ,hospitals ,
× RELATED தேர்தலின்போது வாக்குச்சாவடி...