×

வியாபாரிகள் வராததால் அதிகாரிகள் நடவடிக்கை யோகாவை கட்டாய பாடமாக்க வேண்டும்

சீர்காழி, ஜூன் 18: இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் சுவாமிநாதன் விடுத்துள்ள அறிக்கை:
உலகம் முழுவதும் வரும் ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியின் முயற்சியால் கடந்த 5 வருடங்களாக உலகில் 300க்கும் மேற்பட்ட நாடுகளில் யோகா குறித்த நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. யோகக்கலை பாரத நாட்டின் குறிப்பாக இந்துக்களின் பாரம்பரிய அறிவுசார் சொத்தாகும். தற்போது பலர் யோகாவை வியாபாரமாக்கி வருகிறார்கள். வெளிநாடுகளில் நமது தியான முறை, யோகா, மூச்சுப் பயிற்சி ஆகியவற்றிற்கு காப்புரிமை பெற்று வியாபாரமாக்கி வருகிறார்கள்.எனவே தமிழகத்தில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் யோகா ஒரு பாடமாக தினசரி மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும். கல்வி நிறுவனங்களில் போதுமான யோகா ஆசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும். அரசு ஊழியர்களுக்கும் பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்களுக்கும் தினசரி யோகா பயிற்சிக்கு நேரம் ஒதுக்கி பயிற்றுவிக்க வேண்டும். யோகக்கலை வியாபாரமாவதை தடுக்க மத்திய மாநில அரசுகள் இணைந்து சர்வதேச அளவில் யோகாவிற்கு காப்புரிமை மற்றும் புவிசார் குறியீட்டு உரிமை பெற வேண்டும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : traders ,
× RELATED நீடாமங்கலத்தில் மேம்பாலப்பணியை...