×

ஸ்பிக்நகர் பகுதியில் சண்முகையா எம்எல்ஏ வாக்காளர்களுக்கு நன்றி

ஸ்பிக்நகர், ஜூன் 18: ஓட்டப்பிடாரம் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற சண்முகையா எம்எல்ஏ ஸ்பிக்நகர் பகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். ஓட்டப்பிடாரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுக வேட்பாளர் சண்முகையா எம்.எல்.ஏ., தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து வருகிறார். அந்தவகையில் ஸ்பிக்நகர் பகுதிகளான பாரதிநகர் மற்றும் அத்திமரப்பட்டியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அத்திமரப்பட்டி விவசாய சங்க கட்டிடத்தில் இருந்த விவசாய சங்க நிர்வாகிகள், கோரம்பள்ளம் குளத்தை தூர்வார வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதை ஏற்றுக்கொண்ட சண்முகையா எம்.எல்.ஏ., இதுகுறித்து தகுந்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.

இதனிடையே அத்திமரப்பட்டியில் வீடுவீடாக சென்று நன்றி தெரிவித்தபோது திடீரென மின்சாரம் தடைபட்டது. இருப்பினும் சிறிய மின்விளக்கை கொண்டு நன்றியறிவிப்பை எம்எல்ஏ தொடர்ந்தார். நிகழ்ச்சிகளில் விவசாய சங்கத் தலைவர் அழகுராஜா ஜெபராஜ், திமுக பகுதி செயலாளர் பொன்னரசு வட்டச் செயலாளர்கள் கிருபானந்தம், சுப்பிரமணியன், அவைத்தலைவர் பால்பாண்டி, நிர்வாகிகள் கோயில்பிச்சை, வசந்தி, பட்டுகனி, முருகேசன், சுப்பையா தாஸ், பாக்கியமனி, ஆத்திச்செல்வன், அற்புதராஜ் காங்கிரஸ் நிர்வாகிகள் அகஸ்டின் ஜெபராஜ், திருமால், பட்டுராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : voters ,MLA ,Shanmugya ,area ,Spiknagar ,
× RELATED சிவகங்கை அதிமுக மாஜி எம்எல்ஏ மரணம்