திருக்கடையூர் அருகே லாரி மோதி இளம்பெண் பலி

தரங்கம்பாடி, ஜூன் 18: திருக்கடையூர் அருகே லாரி மோதியதில் டூவீலரில் சென்ற இளம்பெண் பலியானார்.நாகை மாவட்டம் திருக்கடையூர் அருகே உள்ள திருவிடைக்கழியை சேர்ந்தவர் சண்முகவள்ளி (31). இவர் ஒரு குழந்தைகள் காப்பகத்தில் வார்டனாக பணிப்புரிந்து வந்தார். இந்தநிலையில் நேற்று காப்பகத்தில் தங்கி படித்துவரும் மதி, நர்மதா ஆகியோருக்கு உடல்நிலை சரியில்லாததால் அவர்களை அழைத்துக் கொண்டு தனது கணவர் வீரசெல்வத்துடன் டூவீலரில் திருக்கடையூரில் உள்ள மருத்துவமனைக்கு சென்றார். திருக்கடையூர் ஆர்ச் அருகே பின்னால் வந்த லாரி டூவீலர் மீது மோதியது. இதில் சண்முகவள்ளி நிலைதடுமாறி கீழேவிழுந்து பலத்த காயமடைந்தார். உடனே அவரை மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே இறந்தார்.இரு மாணவிகளும், அவரது கணவரும் சிறுகாயங்களுடன் தப்பினர். இதுகுறித்து பொறையார் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : sister ,Larry Moti ,Thirukadaiyur ,
× RELATED அக்காவை கத்தியால் குத்தி கொன்ற தம்பி காவல்நிலையத்தில் சரண்