×

சாத்தான்குளத்தில் நர்சிங் மாணவி தூக்கிட்டு தற்கொலை

சாத்தான்குளம், ஜூன் 18:   சாத்தான்குளம் ஆர்சி வடக்கு தெருவை சேர்ந்தவர் ஜார்ஜ்வின்சென்ட். இவரது மனைவி லிங்கேஸ்வரி. இவர்களுக்கு  சாந்தினி (19) என்ற மகளும், மற்றொரு மகனும் என இரு பிள்ளைகள்.  மகன் பிளஸ்2 படித்து வருகிறார். சாந்தினி, நாசரேத் பகுதியில் உள்ள நர்சிங் கல்லூரியில் உறவினர் வீட்டில் தங்கியபடி 2ம் ஆண்டு படித்து வந்தார். கடந்த வாரம் வழக்கம்போல் விடுமுறையில் ஊர் திரும்பிய சாந்தினி, பின்னர் கல்லூரிக்கு செல்லவில்லை. இந்நிலையில் சம்பவத்தன்று அவர் வீட்டு மாடியில்  தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

தகவலறிந்து விரைந்து வந்த சாத்தான்குளம் இன்ஸ்பெக்டர் அந்தோணி மற்றும் போலீசார், உடலை கைப்பற்றி சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக அனுப்பிவைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : suicide bomber ,Sathankulam ,nursing student ,
× RELATED உளுந்தூர்பேட்டை அருகே நர்சிங் மாணவி...