வேம்பார் கல்லூரியில் 9ம் ஆண்டு துவக்கவிழா

குளத்தூர், ஜூன் 18: குளத்தூர் அடுத்த வேம்பார் தேவநேசம் இருதயம்மாள் பாலிடெக்னிக் கல்லூரியில் 9ம் ஆண்டு துவக்க விழா நடந்தது. பங்குத்தந்தை ககரின் அருள்ராஜ் ஜெபம் செய்து விழாவைத் துவக்கிவைத்தார். கல்லூரி நிர்வாக அலுவலர் டினோமின் வரவேற்றார். கல்லூரி சேர்மன் துரைராஜ், முதல்வர் கிருபாகரன்ஜோசப் வாழ்த்திப் பேசினர். ஷெல் புரபசனல் சர்வீஸ் சிஇஓ நெல்சன்பால் கல்லூரி நிர்வாகம் குறித்துப் பேசினார். முதலாமாண்டு துறைத் தலைவர் சரவணன் கல்லூரி விதிமுறைகளை விளக்கினார். உச்சிநத்தம் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியை கிறிஸ்டி எப்சிபா, வேம்பார் அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் கஜேந்திரபாபு வாழ்த்திப் பேசினர். கல்லூரி துணை முதல்வர் மரியஜேசுவடியாள் நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

Tags : celebration ,Vembar College ,
× RELATED நேரு பிறந்தநாளை முன்னிட்டு அரசு காப்பகத்தில் குழந்தைகள் தினவிழா