×

பண்டாரவிளையில் இன்று சுயம்புலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா துவக்கம்

ஏரல், ஜூன் 18: பண்டாரவிளை ஸ்ரீ சுயம்புலிங்க சுவாமி கோயில் கும்பாபிஷேக விழா இன்று (18ம் தேதி) துவங்குகிறது. ஏரல் அருகே பண்டாரவிளையில் உள்ள பிரசித்திபெற்ற சுயம்புலிங்க சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா இன்று (18ம் தேதி) காலை 7 மணிக்கு மங்கள இசை, விக்னேஸ்வர பூஜையுடன் துவங்குகிறது. தொடர்ந்து பிரம்மசார்ய பூஜை, தீபாராதனை நடக்கிறது. காலை 10 மணிக்கு நவக்கிரக பூஜை முதலான பல்வேறு பூஜைகளை தொடர்ந்து 11 மணிக்கு வாஸ்து சாந்தி, பல்வேறு ஹோமங்கள் நடைபெறும். மாலை 5 மணிக்கு தீர்த்த ஸங்க்ரஹணத்துக்கு பிறகு முதற்கால யாகசாலை பூஜை நடக்கிறது. இரவு 8 மணிக்கு கோயில் திறப்பு விழா, குத்துவிளக்கேற்றல் நடைபெறும். நாளை (19ம் தேதி) காலை 8 மணிக்கு மங்கள இசையுடன் 2ம் கால யாகபூஜை நடக்கிறது. இதையொட்டி புதிதாகக் கட்டப்பட்டுள்ள கோயில் மண்டபத்தை தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளாரான முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் எம்.எல்.ஏ திறந்துவைக்கிறார். தொடர்ந்து அணையா தீபவிளக்கை ஆஷா சண்முகநாதன் ஏற்றிவைக்கிறார். மடத்தூர் அய்யா அதிசயபதிக்கு சொந்தமான குரு சுவாமி லிங்கம் கன்னிவிநாயகர் கோயிலை திறந்துவைக்கிறார். பண்டாரவிளை வைத்தியர் முருகேசன் சுயம்புலிங்க சுவாமி கோயில் முதல் பிரகார கட்டிடத்தை திறந்து வைக்கிறார். சென்னை வேளச்சேரி வணிகர் சங்க மாநில துணைத்தலைவர் பெருமாள் நாடார் திருக்கோயில் மூலஸ்தான அறையை திறந்து வைக்கிறார்.

கோவை சிவசுப்பிரமணியன் பிரமசக்தி அம்மன் கோயிலையும், கோட்டைக்காடு உத்திரக்குமார் என்ற பாபு, முருகேஸ்வரி ஆகியோர் பெருமாள் சுவாமி கோயிலையும், அய்யாத்துரை கிழவி அம்மன் கோயிலையும், ஐயம்பாண்டி நாடார்- லிங்கபுஷ்பம் ஆகியோர் பத்திரகாளி அம்மன், மாரியம்மன் கோயிலையும் திறந்து வைக்கின்றனர். காலை 10 மணிக்கு தாமிரபரணி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்துவருதலும், மாலை 5.30 மணிக்கு 3ம் கால யாகசாலை பூஜையும், மருந்து சாற்றுதலும் நடைபெறும். கும்பாபிஷேக தினமான வரும் 20ம் தேதி காலை 8 மணிக்கு 4ம் கால யாக பூஜையும், காலை 11 மணிக்கு கோயில் விமானம் மற்றும் சுயம்புலிங்க சுவாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கு மஹா கும்பாபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து மஹா அபிஷேகம், அலங்கார தீபாராதனை  நடைபெறும். நண்பகல் 12.30 மணிக்கு மஹேஸ்வரபூஜையை தொடர்ந்து அன்ன தானம் நடக்கிறது.
கும்பாபிஷேக விழாவையொட்டி 3 நாட்களும் 3 வேளையும் சிற்றுண்டி, அன்னதானம் வழங்கப்படுகிறது.  ஏற்பாடுகளை கோயில் தர்மகர்தா வைத்தியர் சந்திரபால் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Tags : Swayambalinga Swamy Kumbabhishek Festival ,
× RELATED இளையரசனேந்தலில் சுமை தூக்கும் தொழிலாளர் சங்க பெயர் பலகை திறப்பு