கோவில்பட்டியில் அமமுகவினர் அதிமுகவில் ஐக்கியம்

கோவில்பட்டி, ஜூன் 18: கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜூ  முன்னிலையில் அமமுகவினர் அதிமுகவில் இணைந்தனர். கழுகுமலை  தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தலைவரும் அமமுக வடக்கு மாவட்ட பொருளாளருமான  முத்தையா, முருகன், கூட்டுறவு பண்டகசாலை தலைவரும், ஜெயலலிதா பேரவை நகரச் செயலாளருமான கருப்பசாமி ஆகியோர் தலைமையில் கழுகுமலை பேரூராட்சி பகுதிகளைச் சேர்ந்த அமமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விலகி கோவில்பட்டியில்  அமைச்சர் கடம்பூர் ராஜூ முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

அப்போது கோவில்பட்டி நகர அதிமுக செயலாளர்  விஜயபாண்டியன், ஒன்றியச் செயலாளர் அய்யாதுரை பாண்டியன், ரமேஷ், மகேஷ்குமார்,  அன்புராஜ், சுப்புராஜ், அல்லித்துரை, சவுந்திரராஜன், அருணாசலசாமி, வேலுமணி,  வெள்ளத்துரை, பாலமுருகன், போடுசாமி, ரத்தினவேல்  உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Tags : Unity ,Kavilpatti Ammavikal ,
× RELATED நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டில்...