×

கீழ இலந்தைகுளம் பள்ளியில் கூடுதல் ஆசிரியர்கள் நியமிக்க வலியுறுத்தல்

பாப்பாக்குடி 18:  பாப்பாக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழ இலந்தைகுளம் ஊராட்சி ஒன்றியத்தொடக்கப் பள்ளியில் கூடுதல் ஆசிரியர் நியமிக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இக்கிராமத்தில் உள்ள இப்பள்ளியில் 74 மாணவர்கள் பயின்று வருகின்றனர். 3 ஆசிரியர்கள் பணியிடம் உள்ள இப்பள்ளியில் ஏற்கனவே பணியாற்றிய ஆசிரியர் ஒருவர் கடந்த ஆண்டு பதவு உயர்வு பெற்று வேறு பள்ளிக்குச்சென்று விட்டார். இதனால் கடந்த ஒரு ஆண்டாக இப்பள்ளியில் இரு ஆசிரியர்கள் மட்டுமே அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பாடம் கற்றுக் கொடுக்கின்றனர்.

இரு ஆசிரியர்களால் 5 வகுப்புகளுக்கும் பாடம் கற்று கொடுக்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதால் மாணவர்கள் கல்வி பயில்வதில் சிரமம் உள்ளதாக கூறி இப்பள்ளிக்கு கூடுதல் ஆசிரியர் நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கீழ இலந்தைகுளம் கிராம மக்கள் பாப்பாக்குடி வட்டார கல்வி அலுவலர் பிரான்சிஸ் முத்துராஜிடம் நேற்று கோரிக்கை மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அலுவலர் இது குறித்து பரிசீலிப்பதாக உறுதியளித்தார்.

Tags : teachers ,London School ,
× RELATED தலித் ஆயர்களை நியமிக்க வலியுறுத்தி பிரசாரம்