×

கூந்தன்குளத்தில் மரக்கன்றுகள் நட்டிய பறவை ஆர்வலர்களுக்கு பாராட்டு

நாங்குநேரி, ஜூன். 18: கூந்தன்குளத்தில் சூறைக்காற்றில் விழுந்த கருவேல மரங்களுக்கு பதிலாக மரக்கன்றுகள் நட்டிய பறவை ஆர்வலர்களை அப்பகுதியினர் பாராட்டினர். மூலைக்கரைப்பட்டி அருகேயுள்ள கூந்தன்குளம் பகுதியில் கடந்த மாதம் வீசிய  சூறாவளிக்காற்றினால் ஏராளமான மரங்கள் முறிந்து விழுந்து சேதமடைந்தன. அப்போது கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் இருந்த கருவேல மரங்கள் மற்றும் அவற்றில் கூடுகட்டியிருந்த ஏராளமான வெளிநாட்டுப்பறவைகள் கீழே விழுந்து சேதமடைந்தன. இதனால் உள்ளூர் பறவைகள் நல ஆர்வலர்கள் கவலை அடைந்தனர்.

இதனை அடுத்து பறவைகள் நல ஆர்வலர்கள் ஒன்றிணைந்து கூந்தன்குளத்திலுள்ள பறவைகளுக்கு உதவும் வகையில் மரக்கன்றுகள் நட திட்டமிட்டனர். அதனைத்தொடர்ந்து சுமார் 100 மரக்கன்றுகளை கூந்தன்குளம் பகுதியில் பறவைகளுக்காக நட்டு வைத்து அவற்றிற்கு பாதுகாப்பு வலையும் அமைத்தனர். பறவைகள் மற்றும் இயற்கை வளங்கள் மீது அக்கறை கொண்டு அவற்றிற்கு உதவ முன் வந்த சிந்தாமணி முன்னாள் ஊராட்சித் தலைவர் ராமசுப்பு,கூந்தன்குளம் பறவை ஆர்வலர் ரமண்பாபு, ஊராட்சி செயலர் தடிவீரன் உள்ளிட்ட பறவைகள் ஆர்வலர்களை அப்பகுதியினர் பாராட்டினர்.

Tags : bird lovers ,Koodankulam ,
× RELATED கூடங்குளம் அணுமின் நிலைய பணியாளர்...