×

தென்காசி, வள்ளியூரில் டாக்டர்கள் போராட்டம்

தென்காசி, ஜூன் 18:  தென்காசியில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்கம் குற்றாலம் கிளையின் சார்பில் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு கோட்டாட்சியரிடம் கோரிக்கை மனு அளித்தனர். கொல்கத்தாவில் மருத்துவர்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், மத்திய அரசு இம்மாதிரியான தாக்குதல்களை தடுக்கும் வகையில் கடுமையான சட்டங்கள் கொண்டுவர வலியுறுத்தியும், இந்திய மருத்துவ சங்கங்களின் சார்பில் மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நேற்று இந்திய மருத்துவ சங்கம் குற்றாலம் கிளைக்குட்பட்ட தென்காசி, செங்கோட்டை, சுரண்டை, பாவூர்சத்திரம், ஆலங்குளம், கடையநல்லூர் பகுதிகளில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் நேற்று காலை 6 மணி முதல் இன்று (18ம் தேதி) காலை 6 மணி வரை 24 மணி நேரம் மருத்துவர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

நோயாளிகளின் நலன் கருதி அவசர கிகிச்சைகள் மற்றும் பிரசவங்கள் வழக்கமான முறையில் செயல்பட்டன. முன்னதாக கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மருத்துவ சங்க தலைவர் டாக்டர் சீதாலெட்சுமி தலைமையில் செயலாளர் டாக்டர் கிருஷ்ணகுமார், நிதி செயலாளர் டாக்டர் ராஜசேகர், ஐஎம்ஏ புதிய உறுப்பினர் சேர்க்கைக்கான மாநில தலைவர் டாக்டர் அப்துல்அஜீஸ் உள்ளிட்ட ஏராளமான மருத்துவர்கள் கோட்டாட்சியர் அலுவலகத்தில் ஆர்.டி.ஓ. சவுந்தரராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

வள்ளியூர்: கொல்கத்தாவில் டாக்டர்கள்  மீதான தாக்குதலை கண்டித்து  தேசிய அளவில் மருத்துவர்கள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக வள்ளியூர் மருத்துவ சங்கத்தினர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு  வள்ளியூர் மருத்துவ  தலைவர்  கிறிஸ்டோபர் தலைமை வகித்தார். செயலாளர் பாலாஜி மருத்துவமனை மருத்துவர் சங்கரவெங்கடேசன் மற்றும் பொருளாளர் நசீர்  முன்னிலை வகித்தனர். இதில் டாக்டர்கள் ரஸ்கின், ஜார்ஜ் திலக், ரவீந்திரன், ஜெயந்திர பாண்டியன், சங்கரன், ஜெகநாதன், முத்துகிருஷ்ணன், கவிதா சங்கரவெங்கடேசன், பிந்துகுமார், கவிதா முத்துகிருஷ்ணன், யாமனி, ரமணி ரவீந்திரன், நிர்மலா பாஸ்கரன், செல்வன் மற்றும் ராதாபுரம் நான்குநேரி , திசையின்விளை   தாலுகாக்களில் உள்ள 55 மருத்துவமனைகளை சேர்ந்த 80 டாக்டர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Doctors ,Tenkasi ,Valliyur ,
× RELATED தென்காசி மாவட்டம் கரட்டுமலை சோதனை...