வாஞ்சிநாதன் நினைவு தினம்

செங்கோட்டை, ஜூன் 18: சுதந்திர போராட்ட வீரர் வாஞ்சிநாதன் நினைவு தினத்தை யொட்டி செங்கோட்டையில் உள்ள அவரது சிலைக்கு திமுக மற்றும் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நகர திமுக சார்பில் நகரச்செயலாளரும் முன்னாள் நகர்மன்றத்தலைவருமான எஸ்.எம்.ரஹீம், மாவட்ட மாணவரணி அமைப்பாளர் வழக்கறிஞர் வெங்கடேசன், மாவட்ட பிரதிநிதி கல்யாணி, பொருளாளர் ஜெயராஜ், நகர இளைஞரணி அமைப்பாளர் மணிகண்டன், தலைமை கழக பேச்சாளர் குத்தாலிங்கம் ஆகியோர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

நகர அதிமுக சார்பில் நகர செயலாளர் கிருஷ்ணமுரளி (எ) குட்டியப்பா,நகர அவைத்தலைவர் தங்கவேலு, மாவட்ட அண்ணா தொழிற்சங்க தலைவர் சிவனுபாண்டியன், மாவட்ட சிறுபான்மை நலப்பிரிவு இணைச்செயலாளர் ஞானராஜ், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் ஐயப்பன், ராஜகோபாலன், சுந்தரம் ,நகர எம்ஜிஆர் மன்ற தலைவர் சுப்பிரமணியன், நகர ஜெ. பேரவைத்தலைவர் ஜாகீர்உசேன், முருகன், சக்திவேல் மற்றும் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பள்ளி மாணவர்கள்,வர்த்தகர்கள்,பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் கலந்து கொண்டு வாஞ்சிநாதனுக்கு வீர வணக்கம் செலுத்தினர்.

Tags : Vanniyanathan Memorial Day ,
× RELATED சேர்ந்தமரம் பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகளை மத்திய குழுவினர் ஆய்வு